தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.3.11

மார்க்சிஸ்ட் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியா?

சென்னை : அ.தி.மு.க., அணியில் ம.தி.மு.க., - மார்க்சிஸ்ட் - இந்திய கம்யூ., கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு உடன்பாடு முடியாமல் இழுத்துக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க., தரப்பிலிருந்து எப்போது அழைப்பு வரும் என, மூன்று கட்சிகளின் தலைவர்களும் காத்திருக்கின்றனர். அவர்கள் யாரும் வெளியூர் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் சென்னையில் இன்று அவசரமாக கூடுகிறது.

அக்கூட்டத்தில் அ.தி.மு.க., தரும் குறைந்த சீட்டுகளை பெற்றுக் கொள்வதா? அல்லது தனித்து

போட்டியிடுவதா? என்ற நிலைப்பாட்டை குறித்து. மாவட்டச் செயலர்கள் மற்றும் சிட்டிங் எம்.எல்.ஏ.,கள் விவாதிக்கவுள்ளனர்.அசாம் மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்திருப்பதால், தமிழகத்திலும் அதே நிலை வருமா? என்ற கேள்வி அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

0 கருத்துகள்: