தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.1.11

காவிக் கொடியவர்களின் கையில் சிக்கி தவிக்கும் தேசியக்கொடி!!


இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களை, படுகொலைகளை எதிர்த்து சுதந்திரத்திற்காக ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் அனைவரும் இரத்தம் சிந்தி போராடும் கஷ்மீரிகளின் உணர்வுகளை புண்படுத்துவதற்காக திட்டமிட்டு பாசிச பா.ஜ.க சங்பரிவார தொண்டர்களை திரட்டிக்கொண்டு ஸ்ரீநகர் சென்று குடியரசு தினத்தன்று (இன்று,26,ஜனவரி.2011) தேசியக்கொடியை ஏற்றப் போவதாக அறிவித்ததை தொடர்ந்து கஷ்மீரில் பதட்டம் நிலவுகிறது.

தேசப்பற்று, தேசியக்கொடி என்ற பெயரில் மீண்டும் சங்பரிவார் கும்பல்கள் இந்திய சிறுபான்மை முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வை பெரும்பான்மை மக்களிடம் விதைக்க ஆரம்பித்துள்ளது.கொடி பிடிக்க காரணமென்ன? அஜ்மீர், மாலேகான், மற்றும் மக்கா மஸ்ஜித்களில் வெடிகுண்டு வைத்து பலரின் உயிரிழப்புக்கு காரணமானது சங்பரிவார்தான் என்று பட்டவர்த்தனமாக அவர்களின் முகமூடி கழற்றியெறியப்பட்டு நிர்க்கதியாய் நிற்கும் இச்சூழ்நிலையில் பொதுமக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக தேசப்பற்று என்ற மற்றொரு முகமூடியணிந்து வந்திருக்கிறது சங்பரிவார்.பா.ஜ.க தலைமையிலான அந்த மதவெறி சக்திகள் இன்று (26,ஜனவரி.2011) காஷ்மீர் ஸ்ரீநகரில் குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடியை ஏற்றப்போவதாக அறிவித்து பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. காக்காய் பிடிப்பதில் வல்லர்களான 'காவி' வந்தேறிகள் ஆங்கில 'வந்தேறிகளோடு' கைக்கோர்த்து பிரிட்டிஷ் ஆண்டைகளின் அடிமைகளாக செயல்பட்ட இவர்களால் 'மூவர்ண தேசியக் கொடி' சுதந்திரப் போராட்ட காலத்தில் ஒருபொழுதும் பிடிக்கப்பட்டதே இல்லை. ஒட்டு மொத்த இந்தியாவே ஆங்கிலேய அரசை எதிர்த்த போது இவர்கள் மட்டும் பிரிட்டிஷாருக்கு வக்காலத்து வாங்கி ஒத்து ஊதினர் என்பது வரலாறு. இந்திய தேசியக் கொடியை கையிழேந்தும் அருகதை சங்பரிவாரத்திற்கு உள்ளதா? என்று வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால் உண்மை விளங்கும்.
சுதந்திரத்திற்கு முன்பிருந்தே காவிக் கொடியை தவிர வேறொன்றும் பிடிக்காத கயவர்களுக்கு மூவர்ணக் கொடி அறவே பிடிக்காது. சங்பரிவாரின் ஆங்கில ஊதுகுழலான ஆர்கனைசர் (ஜூலை 17, 1947) இதழில், சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடியாக 'மூவர்ண கொடியை தேர்ந்தெடுத்தது பற்றி மிகவும் வருந்தியும் காவிக் கொடிதான் தேர்ந்தெடுக்கபட்டிருக்க வேண்டும் என்றும் முகப்பு கட்டுரை வடித்தது. ஆகஸ்ட் 14 (1947) அன்று எழுதிய மற்றொரு முகப்பு கட்டுரையில் 'மூவர்ணக் கொடியை' பற்றி மிகவும் இழிவாக 'மூன்று என்ற எண்ணே அபசகுனமானது அதனால் மூன்று வர்ணங்களை கொண்ட தேசியக்கொடி பாரதமாதாவிற்கு கேடு விளைவிக்கும்' என்று பூச்சாண்டி காட்டி காவிக் கொடியை தேசியக் கொடியாக அறிவிக்க வேண்டுமென்று பலமுறை முயன்று தோற்றது.

இந்திய சுதந்திரத்திற்கு பிறகு வெளியான கோல்வால்க்கரின் 'சிந்தனை கொத்துக்கள்' என்ற நூலில்கூட தேசியக் கொடியை விமர்சித்து காவிக் கொடியை புகழ்ந்து, இந்தியாவில் வசிக்கும் அனைவரும் ஒருநாள் காவிக்கொடி முன் தலைவணங்க வேண்டிய நிலை உருவாகும் என்று எழுதியிருந்தது. சங்பரிவாரம் நடத்தும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் மூவர்ணக் கொடிக்கு இன்று வரை இடமே கிடையாது. அதன் தலைமையகமான நாக்பூர் அலுவலகத்திலோ அல்லது அது 'ஷாகா' பயிற்சி நடத்தும் மைதானங்களிலோ தேசியக் கொடியை பறக்கவிட்டதே இல்லை. ஆனால் எப்பொழுதெல்லாம் இந்திய முஸ்லிம்களை சீண்டி மதக்கலவரம் உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறதோ அப்பொழுது மட்டுமே சங்பரிவாரின் கண்களுக்கு மூவர்ண தேசியக்கொடி தென்படும்.சில ஆண்டுகளுக்கு முன்பாக ஜோசியத்தை பள்ளிக் கல்லூரிகளில் பாடமாக்க வேண்டும் என்று முன்மொழிந்த முரளிமனோகர் ஜோஷீ தலைமையில் ஸ்ரீநகர் லால்சௌக்கிலும், உமாபாரதி தலைமையில் கர்நாடக ஈத்கா மைதானத்தில் தேசிய கொடியேற்றி கலவரம் விளைவிக்க முயன்றனர். ஹிந்துக்களுக்கு மதவெறி ஊட்ட காவிக் கொடியையும் முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்த மூவர்ணக் கொடியையும் சந்தர்பத்திற்கு தகுந்தாற்போல் பயன்படுத்தி வந்திருக்கிறது. பாப்ரி பள்ளிவாசலை இடிப்பதற்காக அதன் மண்டபங்களின் மீது ஏறிய ஹிந்து வன்முறைகும்பலின் கையில் 'காவி' கொடி இருந்ததை நாமெல்லாம் மறந்திருக்க முடியாது.

ஸ்ரீநகரில் தேசியக்கொடி ஏற்றப்போகிற சாக்கிலே கலவரம் விளைவித்து மத நல்லிணக்கத்திற்கு வேட்டு வைக்க முயலும் காவி பச்சோந்திகள் சட்டத்தை சந்திக்க திராணியில்லாது தாங்கள் செய்த 'காலித் தனத்துக்கு' மூவர்ணம் பூசி தப்பிக்க முயற்சிக்கிறார்கள். அரசியல் ஆதாயம் தேடும் இவர்களின் ஈனச் செயலை இந்திய ஒருமைப்பாட்டில் அக்கறை கொண்டவர்கள் மக்களுக்கு தோலுரித்து காட்டவேண்டும்.

நன்றி : பிறைநதிபுரத்தான்

அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனாவிடம் தோல்வி அடையும் அபாயம் : ஒபாமா பேச்சு

வாஷிங்டன், ஜன.27   அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் ஒபாமா வருடாந்திர உரை நிகழ்த்துவது வழக்கம். அதன்படி அவர் நேற்று அவர் உரையாற்றினார். ஒரு மணி நேரம் அவர் பேசிய போது அவர் 3 முறை இந்தியாவை பற்றி குறிப்பிட்டார்.

அவர் பேசுகையில்; இந்தியா சீனா போன்ற நாடுகளில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை நன்றாகவும் மிக சீக்கிரமாகவும், நீண்ட காலத்துக்கும் படிக்க வைக்கிறார்கள். அதோடு அவர்கள் கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். இந்த நாடுகள் ஆராய்ச்சி மற்றும் புதிய தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் அதிக முதலீடு செய்து வருகின்றன. இவற்றுக்கு மாறாக அமெரிக்காவில் கணிதம், அறிவியல் ஆகிய படிப்புகளின் தரம் மிகக்குறைவாக உள்ளது.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க கல்வி பின் தங்கி உள்ளது. ஆராய்ச்சி, தொழில் நுட்பம், கல்வி ஆகிய துறைகளில் அமெரிக்கா தோற்கடிக்கப் படுவதற்கான வாய்ப்புகள் 

27.1.11

ஜனவரி 27 போராட்டம் : மாலைமலர் செய்தி


பாபர் மசூதி வழக்கு தீர்ப்பை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு:
சென்னை, ஜன. 27-
பாபர் மசூதி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மெமோரியல் ஹால் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் அப்துல்ஹமீது தலைமை தாங்கினார்.
நிறுவனத் தலைவர் ஜைனுல் ஆபிதீன் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் பாபர் மசூதி இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் அலகாபாத் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு சட்டத்துக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு என்று ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயம் கருதுகிறது.
எனவே உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தீர்ப்பை மறுபரிசீலனைக்கு தானாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். மாநில துணைத் தலைவர் ரகமத்துல்லா உள்பட ஏராளமான பிரமுகர்களும் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் பஸ்-வேன்களில் வந்திருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் ஐகோர்ட்டை நோக்கி முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்ததால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு போக்குவரத்தை திருப்பி விட்டனர்.
27-1-2010 மாலை மலர்

ஜனவரி 27 போராட்டம் – பத்திரிக்கை அறிக்கை ! தமிழ் , ஆங்கிலம்


புகைப்படம் மற்றும் செய்தி விரைவில் இன்ஷா அல்லாஹ்..
பாபர் மசூதி வழக்கில் சட்டவிரோதத் தீர்ப்பைக் கண்டித்து அலைகடலென ஆர்ப்பரித்த மக்கள் வௌளம்
அறுபது ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பாபர் மசூதி இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் அலகாபாத் உயர்நீதி மன்ற பெஞ்ச் வழங்கிய தீர்ப்பு சர்வதேச நீதி நெறிமுறைகளுக்கு எதிராகவும் இந்தியாவின் உரிமையியல் சட்டத்துக்கு எதிராகவும் அளிக்கப்பட்ட அநியாயத் தீர்ப்பு என்று ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதயாமும் கருதுகிறது. மத உணர்வுக்கு அப்பாற்பட்ட நியாவான்களும் இந்தக் கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
பாபர் மசூதி இருந்த இந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். இப்படி முடிவு எடுக்க எந்தச் சட்டவிதியும் உரிமையியல் சட்டத்தில் இல்லை. இது அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.
அப்படியே ஒருவர் குறிப்பிட்ட இடத்தில் பிறந்திருந்தால் அதற்காக அவர் அந்த இடத்தின் உரிமையாளராவார் என்று இந்தியாவிலும் உலகில் எந்த ஒரு நாட்டிலும் சட்டம் இல்லை. எனவே இவர்களின் தீர்ப்பு சட்ட விரோதமானது.
குறிப்பிட்ட இடம் யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்க அந்த இடத்தில் இதற்கு முன் என்ன இருந்தது என்று தோண்டிப்பார்க்க வேண்டும் என்று இந்தியாவிலோ வேறு எந்த நாட்டிலோ சட்டம் இல்லை. இதையும் அந்த நீதிபதிகள் மீறியுள்ளனர்
தோண்டப்பட்ட இடத்தில் கிடக்கும் பொருளைக் கொண்டு இன்னார் இந்தமாதிரியான கட்டடத்தை இடித்தார் என்று கண்டு பிடிக்கலாம் என்று இந்திய உரிமையியல் சட்டத்தில் சட்ட விதி ஏதும் இல்லை. இதையும் நீதிபதிகள் மீறியுள்ளனர்.
குறிப்பிட்ட இடத்தில் ராமருக்கு கோவில் இருந்தது என்று கூறுவது நீதிமன்றத்தின் வேலையல்ல. அந்த வேலையை நீதிபதிகள் செய்துள்ளனர்.
அந்த இடத்தில் இருந்த ராமர் கோவிலை பாபர் இடித்தார் என்று கற்பணையாக முடிவு செய்யும் அதிகாரம் நீதிபதிகளுக்கு இல்லை.
ஆவணம் யார் பெயரில் இருந்தது என்பதை பார்ப்பதுதான் நீதிமன்றத்தின் வேலை. ஆனால் எடுத்துக் காட்டப்பட்ட ஆதாரங்களை அவர்கள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
யாருடைய அனுபவத்தில் இருந்து வருகிறது என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. 1528 முதல் 450 வருடம் முஸ்லிம்களின் அனுபவத்தில்தான் இருந்து வந்தது என்பது உலகம் அறிந்த உண்மை. ஆனால் இந்த உண்மையையும் நீதிபதிகள் கண்டு கொள்ளவில்லை.
ஒரு இடம் குறித்து தீர்ப்பு அளிப்பதற்கு ஸ்டேட்டஸ் கோ – அதாவது இப்போது எப்படி இருக்கிறதோ அப்படி நீடிப்பது – என்ற நிலை வழக்கு தொடுத்த நேரத்தில் உள்ள நிலையைத்தான் குறிக்கும். வழக்குத் தொடுத்த 1949 ல் அது முஸ்லிம்களிடம்தான் இருந்தது. அதை அலட்சியம் செய்து விட்டு இப்போது அது பள்ளிவாசலாக இல்லை என்று கூறியிருப்பது அப்பட்டமான மோசடியாகும்.
1992 வரை அது பள்ளிவாசலாக இருந்தது என்பதும் அது திட்டமிட்டு இடிக்கப்பட்டது என்பதும் உலகறிய நடந்ததாகும். ஆனால் இப்போது பள்ளிவாசல் அங்கே இல்லை என்பதால் அது இந்துக்களுக்குச் சொந்தம் எனக் கூறியிருப்பது அப்பட்டமான சட்ட மீறலாகும். பள்ளிவாசல் இடிக்கப்படாமல் இருந்தால் இவர்கள் என்ன தீர்ப்பு சொல்வார்கள்? இடிக்கச் சொல்லி உத்தரவு போடுவார்களா?
இப்படி அடுக்கடுக்கான சட்ட மீறல்கள் செய்து சிறுபான்மை மக்களுக்கு வரலாற்றில் இது வரை நடந்திராத மாபெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் இதில் தீர்ப்பு அளிக்க முடியாது என்று கூறி வந்த இந்துத்துவா இயக்கங்கள் அமைதி காக்குமாறு வழக்கத்துக்கு மாறாக அறிக்கைகள் விட்டது இந்தத் தீர்ப்பில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
நீதிமன்றங்களை நாம் மதிப்பது அவர்கள் சட்டப்படி தீர்ப்பளிக்கும் அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதற்காகத்தான். அந்த நபர்களுக்காக அல்ல. சட்டத்தின்படி அளிக்கப்படாத இந்தத் தீர்ப்பை ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம் சமுதாயம் மட்டுமின்றி உலக முஸ்லிம் சமுதாயமும் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தச் சட்ட விரோதத் தீர்ரபை வழங்கிய மூன்று நீதிபதிகளையும் சமுதாயத்தின் சார்பில் வனமையாகக் கண்டிக்கிறோம். உச்ச நீதி மன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன் படுத்தி இந்த அநீதியான தீர்ப்பை மறு பரிசீனைக்கு தானாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இதில் மாநில பொதுச்செயலாளா ஆ.அப்துல் ஹமீது அவாகள் தலைமை தாங்கினார். நிறுவனத் தலைவா .ஜைனுல் ஆபிதீன் அவாகள் கண்டன உரையாற்றினாகள்.காலை 11 மணிக்கு துவங்கிய ஆர்ப்பாட்டம் மாலை   மணிக்கு முடிந்தது.
இப்படிக்கு
ஆ.ரஹ்மத்துல்லாஹ்
மாநில துணைத் தலைவார்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்   செய்தி:www.tntj.net    

எகிப்து:தீவிரமடையும் மக்கள் போராட்டம்


கெய்ரோ,ஜன.27:துனீசியாவில் ஏற்பட்ட புரட்சி முஸ்லிம் நாடுகளில் பசியாலும், வேலையில்லாத் திண்டாட்டத்தினாலும் சர்வாதிகார ஆட்சியாளர்களால் அவதிக்குள்ளாகும் மக்களுக்கு அரசுக்கெதிரான போராட்டத்திற்கு உத்வேகத்தை அளித்துள்ளது.

அல்ஜீரியா, யெமன், எகிப்து,ஜோர்டான் போன்ற நாடுகளில் அரசுக்கெதிரான போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் எகிப்து நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் அமெரிக்காவின் கைப்பாவையான ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சி எகிப்திய மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் என்ற பிரதான எதிர்கட்சியினருக்கு தடை, தேர்தல்களில் முறைகேடு, அரசுக்கெதிராக போராட்டம் நடத்த தடை, சமூக இணையதளங்களுக்கு தடை என ஹுஸ்னி முபாரக்கின் சர்வாதிகாரத்திற்கு அளவேயில்லாமல் போய்விட்டது.

இந்நிலையில் துனீசியா நாட்டில் ஏற்பட்ட மக்கள் புரட்சியினால் அந்நாட்டு அதிபர் பின் அலி நாட்டைவிட்டு வெளியேறியது எகிப்திய மக்களுக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது. இதன் காரணமாக எகிப்தின் கெய்ரோ உள்பட பல்வேறு நகரங்களில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில், எகிப்திய தலைநகரான கெய்ரோவில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்குமிடையே நடந்த போராட்டத்தில் ஒரு போலீஸ்காரரும், போராட்டக்காரர் ஒருவரும் கொல்லப்பட்டனர் என presstv தெரிவிக்கிறது.

போராட்டக்காரர்கள் காக்டைல் பாட்டில்களை துறைமுக நகரமான சூயஸில் அரசு கட்டிடங்களின் மீது வீசினர். ஆளுங்கட்சியான தேசிய ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு தீவைக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டதாக நேரில் கண்டவர் தெரிவிக்கிறார்.

ஹுஸ்னி முபாரக்கின் கடந்த 30 ஆண்டுகால ஆட்சியில் வெறுத்துப்போன ஆயிரக்கணக்கான எகிப்திய மக்கள் அந்நாட்டு வீதிகளில் இறங்கி அரசுத் தடையையும் மீறி போராடத் துவங்கியுள்ளனர்.

போராட்டக்காரர்கள் டயர்களை கொளுத்தியதோடு போலீசார் மீது கல் வீசினர். போராட்டக்காரர்களை விரட்டியடிப்பதற்காக கலவரத் தடுப்புப் போலீசார் எகிப்து நகரங்களில் குவிக்கப்பட்டுள்ளனர்.

அரசியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவிக்கையில், வட ஆப்பிரிக்க நாடுகள், அதிலும் குறிப்பாக எகிப்து அங்கு ஆளும் அரசுகள் அமெரிக்காவின் ஆதரவைப் பெற்றிருந்தபோதிலும் ஜனநாயக காலக்கட்டத்தை நோக்கி செல்வதாக கூறுகிறார்.

பிரஸ் டிவிக்கு பேட்டியளித்த வட ஆப்பிரிக்க அரசியல் ஆய்வாளர் நீ அகுட்டே தெரிவிக்கையில், துனீசியாவில் ஏற்பட்ட புரட்சி வட ஆப்பிரிக்க நாடுகளுக்கு சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட உத்வேகத்தை அளித்துள்ளது என கூறியுள்ளார்.

சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு மாறும் காலம் ஆச்சரியப்படும் வகையில் விரைவில் வரும் என கூறுகிறார் நீ அகுட்டே.

புதன்கிழமையும் ஆயிரக்கணக்கான மக்கள் ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சிக்கெதிராக கெய்ரோ மற்றும் அலெக்சாண்ட்ரியா நகரங்களில் போராட்டத்தை நடத்தினர். 20 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டிருந்த போதிலும் கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தை நடத்தினர். அவர்கள் ஒரேகுரலில்,மக்கள் சர்வாதிகார ஆட்சி பதவி விலகவேண்டும் என விரும்புவதாக கோஷங்களை எழுப்பினர்.

'முபாரக்கே வெளியேறு!' 'ரொட்டி,விடுதலை,கண்ணியம்’, 'நாங்கள் துனீசியாவை பின்பற்றுவோம்' என முழக்கமிட்டனர்.

இதற்கிடையே, அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் அக்பார் அல் அரப் என்ற இணையதளம், ஹுஸ்னி முபாரக்கிற்கு அடுத்ததாக பதவி வகிக்க காத்திருக்கும் அவரது மகன் ஜமால் முபாரக் தனது மனைவி மற்றும் மகளுடன் நாட்டைவிட்டு வெளியேறி பிரிட்டனுக்கு சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளது.

source:presstv நன்றி: பாலைவணதூது

தீவிரவாதிகள் தாக்குதல்: ரஷியாவில் மீண்டும் குண்டு வெடித்தது; 4 பேர் பலி


மாஸ்கோ, ஜன 27-
 
ரஷியாவில் உள்ள டோமோதேவ் டோவோ விமான நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை தீவரவாதிகள் மனித குண்டு தாக்குதல் நடத்தினார்கள். இதில் 35 பேர் கொல்லப்பட்டனர்.இந்த நிலையில் இன்று மீண்டும் குண்டு வெடித்து உள்ளது.
 
டாஜெய்டன் மாநிலத்தில் உள்ள கேசவ்பர்ட் நகரில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அங்குள்ள ஓட்டல் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரில் குண்டை வைத்து வெடிக்க செய்தனர். இதில் 4 பேர் உயிர் இழந்தனர். 7 பேர் காயம் அடைந்தனர்.
 
இதே நகரில் கடந்த மாதம் 1-ந்தேதியும் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அதில் 4 பேர் பலியானார்கள்.இந்த பகுதியில் செசன்ய தீவிரவாதிகள் ஆதிக்கம் உண்டு. எனவே அவர்கள் தான் தாக்குதலை நடத்தி இருக்க வேண்டும் என கருதப்படுகிறது. ரஷியாவில் அடுத்தடுத்து நடந்து வரும் குண்டு வெடிப்பு மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

தடையை மீறி போராட்டம் – பி.ஜே பேட்டி: தினமணி செய்தி


தடையை மீறி போராட்டம் பி.ஜே பேட்டி: தினமணி செய்தி
பாபர் மசூதி நிலப் பிரச்னை தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து மறு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தை நோக்கி வியாழக்கிழமை பேரணி நடத்துகிறது.
இது குறித்து அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் பி. ஜெய்னுலாபுதீன் சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
சென்னை மெமோரியல் அரங்கம் அருகில் வியாழக்கிழமை தொடங்கும் இந்தப் பேரணியில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.
அதே நாளில் மதுரையிலும் ரயில் நிலையத்தில் தொடங்கி, அங்குள்ள உயர் நீதிமன்றக் கிளையை நோக்கி பேரணி நடைபெறும்.
இந்தப் பேரணிக்கு காவல் துறை அனுமதி அளிக்காவிட்டால், தடையை மீறி பேரணியாகச் செல்வோம் என்றார் ஜெய்னுலாபுதீன்.
25-1-11 தினமணி

62வது குடியரசு தினம்: நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்

டெல்லி: இந்தியாவின் 62வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலாக கொண்டாடப்பட்டது.

இன்று இந்தியாவின் 62வது குடியரசு தினமாகும். இதையொட்டி நாடு முழுவதும் தேசியக் கொடி ஏற்றும் வைபவங்கள் களை கட்டியிருந்தன.

டெல்லியில் குடியரசு தின விழா வழக்கம் போல கண்கவர் அணிவகுப்புடன் நடந்தேறியது. காலை 9.45 மணியளவில் பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாகேட்டில் உள்ள போர் வீரர் நினைவிடமான அமர் ஜவானில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர் விழா நடைபெறும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். அதன் பின்னர் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், சிறப்பு விருந்தினரான இந்தோனேசிய அதிபர் டாக்டர் ஹாஜி சுசிலோ பம்பாங் யூத்யோனாவுடன் வந்து சேர்ந்தார்.

அதன் பிறகு பிரதீபா பாட்டீல் தேசியக் கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின விழாவைத் தொடங்கி வைத்தார். பின்னர் மேஜர் லய்ஸ்ராம் ஜோதின் சிங்குக்கு அசோக் சக்ரா (மறைவுக்குப் பின்னர்) விருதினை அவர் வழங்கினார். அதன் பின்னர் குடியரசு தின அணிவகுப்பு தொடங்கியது.குடியரசு தின விழாவையொட்டி ராஜ்பாத்மற்றும் டெல்லி முழுவதும் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்தியாவின் படை பலத்தை பறை சாற்றும் வகையிலான மாடல்கள் அணிவகுப்பில் கலந்து கொண்டன. மேலும் டி-90 டாங்குகள், பிரம்மோஸ் லாஞ்சர், பினாகா மல்டி பேரல் ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்டவை இடம் பெற்றன.

இந்தியக் கடற்படை சார்பில் ஐஎன்எஸ் விராத், தல்வார் கிலோ கிளாஸ் நீர்மூழ்கி, மிக் 29-கே ஆகியவற்றின் மாடல்கள் அணிவகுத்து வந்தன.

மேலும் பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரப் பெருமைகளை சித்தரிக்கும் அலங்கார ரதங்கள், பல்வேறு துறைகளின் ரதங்களும் அணிவகுப்பில் கலந்து கொண்டன.

துணை குடியரசுத் தலைவர் வாழ்த்து:

இந்திய குடியரசின் அடிப்படைக் கொள்ளைகளான நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி தனது குடியரசு தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருந்தார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

இந்திய மக்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து தங்கள் நாட்டை குடியரசாக்க வேண்டும் என்று உறுதியாக இருந்ததால் நாம் எத்தனையோ வெற்றிகள் அடைந்துள்ளோம்.

வெற்றிகள் பெற்றிருந்தாலும் நம் நாட்டை உருவாக்கியவர்களின் கனவு இன்னும் முழுதாக நிறைவேறவில்லை. கோடிக்கணக்கான இந்திய குடிமக்கள் இன்னும் வறுமை, பசி, நோய், அறியாமையால் வாடுகின்றனர்.

இந்திய குடியரசின் அடிப்படைக் கொள்ளைகளான நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை மக்கள் பின்பற்ற வேண்டும். இனி வரவிருக்கும் சவால்களை நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து எதிர்கொள்ள வேண்டும்.

அமைதி, முன்னேற்றம் மற்றும் வளமான வாழ்வு பெற நான் அனைத்து குடிமக்களுக்கையும் வாழ்த்துகிறேன் என்று மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் குடியரசு தின விழாக் கொண்டாட்டம்-தேசியக் கொடியேற்றினார் பர்னாலா

சென்னை: தமிழகத்தில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை கடற்கரையில் நடந்த நிகழ்ச்சியில், ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

நாடு முழுவதும் இன்று 62வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் குடியரசு தின விழா கொண்டாட்டம் களை கட்டியது.

சென்னை மெரீனா கடற்கரையில், காந்தி சிலை அருகே நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பர்னாலா தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

முப்படையினர் மற்றும் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. முதல்வர் கருணாநிதி, அமைச்சர்கள், பல்துறைப் பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மாணவ, மாணவியரின் நடனம், கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. அவற்றை ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர்.

நிகழ்ச்சியின்போது ஆர். விவேகானந்தன், ஜே.ரவி, எஸ்.ராஜகோபால், ராஜேஷ் குமார் ஆகியோருக்கு அண்ணா வீர விருதினை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

மேலும், காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கும் முதல்வர் பரிசுகளை அளித்தார்.

மாவட்டத் தலைநகரங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் கலெக்டர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்

லால் சவுக்கில் கொடியேற்ற நிகழ்ச்சி-பாஜகவினர் கைது

ஸ்ரீநகர்: ஸ்ரீநகர், லால் சவுக்கில் தேசியக் கொடியேற்றும் முயற்சியில் ஈடுபட்ட பாஜகவினர் 12 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீநகர் லால் சவுக்கில் தேசியக் கொடி ஏற்றுவோம் என்று பாஜக அறிவித்திருந்தது. ஆனால் அதை மத்திய அரசும், ஜம்மு காஷ்மீர் மாநில அரசும் இணைந்து முறியடித்து விட்டன.

பாஜகவினரின் முயற்சி பலிக்காத வகையில், ஸ்ரீநகர் எல்லை முழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று பிற்பகலில் லால் சவுக்கை நோக்கி தேசியக் கொடியேற்றுடன் வந்த பாஜகவினரை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். 15 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பலத்த பாதுகாப்புப் போடப்பட்டிருந்த நிலையில் இவர்கள் திடீரென மெளலானா ஆசாத் சாலையில், தோன்றி விறுவிறுவென லால் சவுக்கை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். கைகளில் தேசியக் கொடியுடனும், கோஷமிட்டபடியும் இவர்கள் சென்றனர். இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று அவர்களைத் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மூத்த பாஜக துணைத் தலைவர் சோபி யூசுப்பும் ஒருவர். 

மோடிக்கு ஆதரவாகக் கருத்து கூறிய தேவ்பந்த் துணைவேந்தர் ராஜினாமா!

மோடிக்கு ஆதரவாகக் கருத்து கூறியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து தேவ்பந்த தாருல் உலூம் மதரஸாவின் துணை வேந்தராகப் புதிததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மெளலானா குலாம் முஹம்மது தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலம் தேவ்பந்தில் உள்ள தாருல் உலூம் என்ற மத்ரஸாவின் துணை வேந்தராக குஜராத்தைச் சேர்ந்த மெளலானா குலாம் முஹம்மது வஸ்தன்வி என்பவர் அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். மோடியின் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுவதில்லை; மாறாக மோடியின் வளர்ச்சித் திட்டங்களால் குஜராத் முஸ்லிம்கள் பலனடைகின்றனர் என மெளலானா குலாம் கூறியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இதனைத் தொடர்ந்து துணைவேந்தர் பதவியில் இருந்து மெளலானா குலாமை நீக்க வேண்டும் என்று தாருல் உலூம் மாணவர்கள் மற்றும் ஆசியரிகள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, மெளலானா குலாம் தன்னுடைய பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தாருல் உலூமின் ஆலோசனைக் குழுதான் என்னைத் தேர்ந்தெடுத்தது. ஆலோசனைக் குழுவின் கூட்டம் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து நான் பதவி விலகுவேன் என மெளலானா குலாம் செவ்வாய்க் கிழமையன்று கூறியதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

20 உறுப்பினர்களைக் கொண்ட தாருல் உலூமின் ஆலோசனைக் குழு கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி கூடியபோது மெளலானா குலாமை துணை வேந்தராகத் தேர்ந்தெடுத்தது. இந்த ஆலோசனைக் குழுவில் தற்போது 17 பேர் மட்டுமே இருப்பதாகவும் அவர்களில் 14 பேர் மட்டுமே ஜனவரி 10ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டனர் என்றும் கூறப்படுகிறது.

மோடி குறித்து மெளலானா குலாம் கூறிய கருத்துகள் பிரச்சனை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, கோத்ரா கலவரத்திற்குப் பின் மோடிக்கு தான் நற்சான்றிதழ் வழங்கவில்லை என்று மெளலானா குலாம் மறுத்துள்ளார்

25.1.11

ரஷ்ய விமான நிலைய தீவிரவாத குண்டு வெடிப்பில் 31 பேர் பலி, 130 நபர்கள் காயம்


மாஸ்கோ : உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான மாஸ்கோ விமான நிலையத்தில் உள்ள பயணிகள் வருகை பகுதியில் குண்டு வெடித்து குறைந்தது 31 நபர்கள் பலியானதாகவும் 130 நபர்கள் காயமடைந்துள்ளதாகவும் சுகாதார துறை அதிகாரிகள் கூறினர்.


ஆரம்ப கட்ட தகவல்களின் படி இது தீவிரவாத தாக்குதலாக இருக்கும் என கருதுவதாக ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வடேவ் நிருபர்களிடம் கூறினார். மேலும் தற்கொலை மனிதன் மூலம் குண்டு வெடித்திருக்கலாம் என ரஷ்ய அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
குண்டு வெடிப்பை தொடர்ந்து மாஸ்கோ முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டொமோடிடோவா மாஸ்கோவின் நவீன விமான நிலையமாய் இருந்த போதும் அதன் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்திகரமாய் இருந்ததில்லை. 2004-ல் இரு தற்கொலை படை மனிதர்கள் கள்ளத்தனமாய் விமான டிக்கெட் வாங்கி விமானத்தில் பயணித்து 90 நபர்களுடன் விமானத்தை வெடிக்க செய்தது குறிப்பிடத்தக்கது.

உலகின் உயரமான உணவகம் (ஓட்டல்) துபாயில் திறப்பு

துபாய் :  உலகின்  மிக உயரமான  உணவகம் துபாயில்  உள்ள உலகத்தின் மிக  உயரமான கட்டிடமான  புர்ஜ் கலிபாவில் உள்ள 122 வது மாடியில் உள்ளது. பூமியிலிருந்து 442 மீட்டர் உயரமுள்ள          அவ்வுணவகம் பொது மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.
882 மீட்டர் உயரமுள்ள பர்ஜ் கலிபாவில் அமைந்துள்ள “அட்மாஸ்பியர்” என பெயரிடப்பட்டுள்ள இவ்வுணவகம் (ஓட்டல்) நேற்று திறக்கப்பட்டது.  இந்த ஓட்டலுக்கென்று பிரத்யேகமாக உள்ள லிப்டின் மூலம் பர்ஜ் கலிபாவின் கார்பரேட் சூட் லாபியிலிருந்து நேரடியாக செல்லலாம்.
இதில் ஓரே சமயத்தில் 210 நபர்கள் உட்கார்ந்து அமீரகம் முழுமையும் அழகாய் பார்வையிட்டு கொண்டே உண்டு களிக்கலாம். ஆனால் இவ்வளவு வசதி கொண்ட இவ்வுணவகத்தில் ஒரு நபர் சாதாரணமாக சாப்பிட்டால் கூட சுமார் 8500 இந்திய ரூபாய் கொடுக்க வேண்டும். சரி உணவு சாப்பிடாமல் வெறும் தேநீர் மட்டும் சாப்பிட்டால் 100 டாலர் கொடுத்தால் போதும், அதாவது இந்திய மதிப்பில் வெறும் 4600 ரூபாய் கொடுக்க வேண்டும்.
முதல் இரண்டு நாட்களும் முழுமையாய் புக் செய்யப்பட்டு உள்ளதாக ஈமார் ஓட்டல் குழும தலைவர் மார்க் டார்டென் கூறினார். மேலும் இந்த ஓட்டல் இத்துறைக்கே முன்னோடியாய் திகழும் என்றும் கூறினார். 1030 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள இது உலகின் இரண்டாம் உயரமான ரெஸ்டாரெண்டான சிஎன் டவரில் உள்ள சுழலும் 360 ரெஸ்டாரெண்டை விட 92 மீட்டர் உயரமானது.

ஜனவரி 26 'டென்ஷன்': ஜம்முவில் கல்வி நிலையங்களை மூடும் காஷ்மீர் அரசு

ஜம்மு: குடியரசு தினத்தையொட்டி பிரச்சனை ஏற்படலாம் என்பதாலும், பாஜக லால் சௌக்கில் தேசியக் கொடி ஏற்ற திட்டமிட்டுள்ளதாலும் ஜம்மு காஷ்மீரில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களையும் மூடுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அரசு செய்தித் தொடர்பாளர் கூறியதாவது,

குடியரசு தினத்தை முன்னிட்டு ஜம்மு பல்கலைக்கழகம் உள்பட அனைத்து கல்வி நிலையங்களும் நாளை மூடப்பட்டிருக்கும்.

தனியார் கல்வி நிர்வாகங்கள் உள்பட அனைத்து கல்வி நிலைய நிர்வாகத்திற்கும் இந்த உத்தரவை கண்டிப்பாக மீறக்கூடாது என்று தெரிவித்திருக்கிறோம் என்றார்.

பாஜக ஸ்ரீநகரில் தேசிய கொடி ஏற்றத் திட்டமிட்டுள்ளதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாஜகவின் செயலால் ஜம்முவில் பிரச்சனை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈராக்கில் கார் குண்டு தாக்குதல்... 30 பேர் பலி, 70 பேர் காயம்

பாக்தாத்: ஈராக்கில் உள்ள கர்பலா நகரில் ஷியா யாத்திரிகர்களை குறிவைத்து 2 கார் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 30 பேர் கொல்லப்பட்டனர், சுமார் 70 பேர் காயம் அடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கர்பலாவுக்கு செல்லும் யாத்திரிகர்கள் பேருந்துகள் நின்று கொண்டிருந்த டர்மினலில் நடத்தப்பட்ட முதல் தாக்குதலில் 9 பேர் உயிர் இழந்தனர், 18 பேர் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதல் நடந்த சில மணி நேரத்திலேயே கர்பலாவின் தென் பகுதியில் நடந்த மற்றொரு தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர், 50 பேர் காயம் அடைந்தனர்.

கடந்த வாரம் நடந்த மூன்று தற்கொலைப்படை தாக்குதல்களில் 56 பேர் கொல்லப்பட்டனர், 180 பேர் காயம் அடைந்தனர்.

நேற்று ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இரண்டு இடத்தில் தெருவோரம் வைத்திருந்த குண்டுகள் வெடித்தன. முதல் குண்டு வெடித்ததில் ஈராக் இராணுவ அதிகாரி ஒருவரும், அவரது டிரைவரும் கொல்லப்பட்டனர். மேலும், இரண்டாவது குண்டு வெடிப்பில் அந்த வழியாகச் சென்றிருந்தவர்களில் குறைந்தது 8 பேர் காயம் அடைந்தனர்.

கர்பலா நகரில் ஏராளமான ஷியா பிரிவு யாத்திரிகள் கூடியிருந்த நேரத்தில் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன. யாத்திரிகர்கள் ஷியா பிரிவுத் தலைவர்களில் ஒருவரான இமாம் ஹுசைனின் இறப்பிற்காக 40 நாள் துக்கம் அனுஷ்டித்து இறுதியில் கர்பலா செல்வது வழக்கம். இந்த புனித காலத்தில் கர்பலாவில் வாகனப் பயன்பாட்டிற்கு போலீசார் தடைவிதித்துள்ளனர். அதனால் யாத்திரிகர்கள் கால் நடையாக வந்துள்ளனர்.

இதனால் அங்கு கூடுதலாக 120,000 போலீசாரும், இராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.

முதல் கார் வெடிகுண்டு தாக்குதல் கிழக்கு கர்பலாவில் இருந்து 20 கிமீ தூரத்தில் இருக்கும் அல் இப்ராஹிமி பகுதியில் உள்ள பஸ் டர்மினலில் நடந்தது.

இந்த தாக்குதல் நடந்து 4 மணி நேரம் கழித்து தெற்கு கர்பலாவில் இரண்டாவது குண்டு வெடித்தது.

இது குறித்து யாத்திரிகர் பாத்மா மாடலௌல் (40) கூறுகையில், "என்னதான் குண்டு வெடித்தாலும் நாங்கள் ஹூசைனுக்கு மரியாதை செய்ய நாங்கள் எங்கள் யாத்திரையைத் தொடர்வோம். இந்த தாக்குதல்களை நடத்தும் இஸ்லாமிய எதிரிகள் ஓயும் வரை நாங்கள் எங்கள் பயணத்தை நிறுத்தமாட்டோம். நாங்கள் கர்பலா வந்ததே அவர்களுக்கு ஒரு செய்தி சொல்லத்தான். அவர்கள் தாக்குதல் மேல் தாக்குதல் நடத்த ஈராக்கின் பகையாளிகளை எதிர்த்து போராடும் எண்ணம் எங்களுக்கு அதிகரிக்கும் என்பதை தெரிவிக்க விரும்புகிறோம்," என்றார்.

"ஏற்கனவே யாத்திரிகர்கள் தாக்கப்பட்டதால் இந்த தாக்குதல்கள் அதிகாரிகள் எதிர்பார்த்ததுதான். ஆனால் என்னதான் போலீசார் குவிக்கப்பட்டிருந்தாலும் நகரம் முழுவதும் நடந்து வரும் அத்தனை பயணிகளையும் பாதுகாப்பது என்பது கடினமானது", என்று பிபிசியின் ஜிம் தெரிவித்தார்.

பிரமாண்ட புத்தக கண்காட்சி கப்பல் துபாய் வருகை.


துபாய்,ஜன.24:'லோகோஸ் ஹோப்' என்ற கடலில் சஞ்சரிக்கும் கப்பலில் நடைபெறும் புத்தக கண்காட்சி துபாய் வந்தடைந்தது. 50 நாடுகளைச் சார்ந்த 400 பணியாளர்கள் இக்கப்பலில் உள்ளனர். புத்தகக் கண்காட்சி கப்பல் இரண்டு வருட சர்வதேச திட்டமாகும். வருகிற பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி இக்கப்பல் அபுதாபிக்கு செல்லும். இக்கப்பலில் பணிபுரியும் கேப்டன் உள்பட அனைத்து பணியாளர்களுமே சம்பளம் வாங்காமலேயே பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கப்பல் பணியாளர்களில் பொறியாளர்கள்,ப்ளம்பர், புக் கீப்பர், சமையல்காரர்கள், தச்சர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சமூக சேவைகள் மூலமாகவும், இலக்கியம் மூலமாகவும் மக்களுக்கு உதவ இவர்கள் தயார். தென்னாப்பிரிக்காவுக்கு சென்றிருந்த வேளையில் இவர்கள் பள்ளிக்கூடம் நிர்மாணித்தல், நூல்களை இலவசமாக வழங்குதல், இலவச மருத்துவ மற்றும் பல் மருத்துவ க்ளீனிக் ஆகிய பணிகளில் ஈடுபட்டனர்

குழந்தைகளை எரித்து கொல்லும் அளவுக்கு இவர்கள் எப்படி கொடூரமானவர்களாக மாற்றபடுகிறார்கள்!! ஒரு ஆய்வு கட்டுரை


புதுடெல்லி,ஜன.22:ஆஸ்திரேலிய பாதிரியார் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவருடைய 2 மகன்களை உயிருடன் எரித்துக் கொன்ற வழக்கில் தாரா சிங்குக்கு மரண தண்டனை விதிக்கும்படி சி.பி.ஐ தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. ஒரிஸாவில் கடந்த 1999ம் ஆண்டு ஆஸ்திரேலிய பாதிரியார் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ், அவருடைய 2 மகன்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான தாராசிங்குக்கு கீழ் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து தாராசிங் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த ஒரிசா உயர்நீதிமன்றம், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ மேல்முறையீடு செய்தது. தாராசிங்குக்கு மரண தண்டனை விதிக்கும்படி கோரியது. இந்த வழக்கை நீதிபதிகள் சதாசிவம், பி.எஸ்.சவுகான் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட பிறகு, கடந்த மாதம் 15ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் நேற்று அறிவித்தனர். அதில், 'அரிதிலும் அரிதான' வழக்கில் மட்டுமே குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படும். இந்த வழக்கு அந்த பிரிவில் வரவில்லை. எனவே, குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. சி.பி.ஐ மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் செல்வியின் கட்டுரை (சிந்திக்கவும்): இந்த குழந்தைகள் என்ன குற்றம் செய்தன? எப்படி குழந்தைகளை எரித்து கொல்லும் அளவுக்கு இவர்கள் கொடூரர்களாக மாற்றபடுகிறார்கள். இதுதான் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்பின் மூளை சலவை. இவர்கள் ஹிந்து மதத்தை வளர்கிறோம், ஹிந்துக்களுக்கு என்று ஒரு நாடு அதுதான் இந்தியா என்று கூறி அப்பாவி ஹிந்து வாலிபர்களை தங்கள் வலையில் வீழ்த்தி அவர்களுக்கு தீவிரவாத பயிர்ச்சி கொடுக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சுமார் ஐம்பது ஆயிரம் முழுநேர உழியர்களை கொண்டது. முழு நேர உழியர்கள் என்றால் என்ன? இந்த முழு நேர உழியர்கள் திருமணமே செய்து கொள்ளாமல் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சித்தாந்தங்களை இந்தியா முழுவதும் பரப்புவது. இவர்கள் வேறு எந்த வேலைக்கும் போக மாட்டார்கள். தங்கள் இயக்க வேலையை மட்டுமே செய்வார்கள். இன்னும் தெளிவாக செல்லனும் என்றால் தங்கள் உடல், பொருள், ஆவி, எல்லாம் தங்களது இயக்கத்தை பரப்புவதே என்ற அளவுக்கு தீவிரமாக செயல்படுவது. இப்படியாக இந்த முழுநேர உழியர்கள் இந்தியா முழுவது சுற்றி திரிந்து ஹிந்து வாலிபர்களை தங்கள் வலையில் விழவைகிறார்கள். பின்னர் அவர்களுக்கு சிந்தனை ரீதியான பயிற்சி, உளரீதியான பயிற்சி, ஆன்மீக பயிற்சி, ஆயூத பயிற்சி, உளவு பயிற்சி இப்படி கடுமையான பயிற்ச்சிகள் கொடுக்கபடுகிறது.

இவர்களுக்கு பயிற்சி கொடுபதற்க்கு என்றே இந்தியா முழுவது பயிற்சி கேந்திரங்களை ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நடத்துகிறது. ஒரு நாள், மூன்றுநாள் பயிற்சி கேந்திரங்கள் அந்த அந்த மாநிலங்களில் உள்ள பயிற்சி கேதிரங்களில் நடக்கிறது. இங்கு பயிற்சிகளை வெற்றிகிரமாக முடித்தவர்களுக்கு மத்திய பயிற்சி கேந்திரத்தில் பயிற்சி அளிக்கபடுகிறது. மத்திய பயிற்சி கேந்திரங்களை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களான ராஜஸ்தான், உத்திர பிரதேசம், ஒரிசா, கேரளா போன்ற மாநிலங்களில் நடத்தபடுகின்றன. இதன் மூலம் அவர்களுக்கு தீவிரவாத பயிற்சி கொடுக்கபடுகிறது. மேலும் இவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சியும் அளிக்கபடுகிறது. இவர்களுக்கு ஆயூத பயிற்சி அளிப்பது இந்தியாவின் முன்னாள் ராணுவ அதிகாரிகள் என்பது அதிர்ச்சியான உண்மை. இந்தியாவின் பல முன்னாள் ராணுவ அதிகாரிகளும், உளவுத்துறை அதிகாரிகளும், நீதிபதிகளும் பிற்காலத்தில் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்பின் உறுபினர்கள் என்பது உண்மையோ உண்மை.

உலகில் இஸ்ரைளின் உளவுத்துறையான மொசாதுக்கு அடுத்தபடியாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் உளவுத்துறை நாம் சொல்லலாம். அந்த அளவுக்கு ஒரு வலிமையான உளவுத்துறையை தன்னகத்தே கொண்டுள்ளது. இவர்கள் பத்து முதல் இருபது பெயர் கொண்ட ஒரு குழு இதை இவர்கள் ஒரு அணி என்று சொல்கிறார்கள். ஒவ்வொரு அணிக்கும் ஒருதலைவர் என்றமுறையில் இவர்களது அடிமட்ட செயல்பாடு ஆரம்பம் ஆகிறது. குறைந்த பட்சம் ஒரு வூரில் பத்து முதல் ஐம்பது அணிகள் வரை இவர்களுக்கு இருகின்றன. இவர்கள் தான் அந்த வூரில் என்ன நடக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றார்கள்.

இப்படி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பயிற்ச்சி கூடங்களில் பயிற்சி பெறுபவர்களுக்கு முஸ்லிம் மற்றும் சிறுபான்மை எதிர்ப்பு, வெறுப்பு என்பவை போதிக்கப்படுகிறது. எனவே இவர்கள் அன்றாடம் வாழ்வில் நடக்கும் சிறிய விசயங்களையும் மத கண்கொண்டு பார்கிறார்கள். எப்படியெல்லாம் முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மை மக்களோடு பிரச்சனைகளை உண்டாக்கி அதை கலவரங்களாக மாற்றுவது என்பதில் இவர்கள் கைதேர்ந்தவர்கள். கொடுக்கல் வாங்கல் முதல் வியாபார பிரச்சனைகள் வரை மனிதன் அன்றாடம் வாழ்வில் நடக்கும் பிரச்சனைகளை ஹிந்து முஸ்லிம் பிரச்சனை போல் சித்தரித்து இவர்கள் ஒரு ஆதரவு கரம் நீட்டுவது போல் அந்த விஷயங்களுக்குள் வந்து ஒரு பெரும் கலவரம் நடக்க காரண கர்தாவாகிரார்கள்.

கலவரம் செய்வதில் இவர்கள் வல்லவர்கள். ஏன் என்றால் இவர்களிடம் ராணுவ ரீதியில் தாயாரிக்க பட்ட ஒரு படை ஆயூதங்களுடன் ரெடியாக ஒரு தலைமையின் கீழ் முறைபடுத்தப்பட்ட சிறு குழுக்களாக இருந்து செயல்படுகிறது. இவர்கள் கலவரங்களை திட்டமிட்டு நடத்திவிட்டு ஒளிந்து கொள்வார்கள். பாதிக்க பட்ட சிறுபான்மை தங்களது எதிர்ப்புகளை ஜனநாயக முறைப்படி தெரியபடுத்த வீதிகளுக்கு வரும்போது இந்திய கையாலாகாத காவல்துறை இவர்களை பிடித்து குண்டர் தடுப்பு சட்டத்திலும், போடாவிலும், இன்னும் பல ஆள்தூக்கி சட்டங்களிலும் சிறையில் தள்ளி மொத்த கலவரங்களுக்கும் இவர்கள் தான் காரணம் போன்ற ஒரு மாயை தோற்றுவித்து விடுகிறார்கள். இவர்களுக்கு துணையாக இந்த பாசிச சிந்தனை உள்ள பத்திரிக்கைகளும் இந்த பிரச்சனிகளை தலைப்பு செய்திகளாக்கி பூதகரமாக்கி முஸ்லிம் விரோத சிந்தனையை வளர்கின்றன. மக்கள் விழிப்புடன் செயல்படவேண்டிய காலம் இது. இந்த ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத சிந்தனையில் மக்கள் விழுந்துவிடாமல் அந்த பாசிச ஹிட்லர் சித்தாந்தத்தை இந்த மண்ணை விட்டு விரட்டுவது ஒவ்வொரு இந்தியனது கடமை.

எழுத்தாளர், சிந்தனையாளர் திரு.பாரதி கிருஷ்ணா குமார் பஹ்ரைன்னில் சிறப்புரை


பஹ்ரைன்,ஜன.23: பஹ்ரைன் வருகை தந்த தமிழக NCHRO (தேசிய மனித உரிமை இயக்கங்களின் கூட்டமைப்பு )ன் துணைத்தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.M.G.K.நிஜாமுதீன் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பிரபல எழுத்தாளர் திரு.பாரதி கிருஷ்ணகுமார் அவர்களையும் வரவேற்கும் விதமாக நிகழ்ச்சி ஒன்றை பஹ்ரைன் இந்தியா ஃபிரட்டேர்னிட்டி ஃபோரம் (BIFF)-தமிழ்நாடு பிரிவு கடந்த 15-ம் தேதி அன்று இரவு 8 மணி அளவில் BIFF அரங்கத்தில் வைத்து நடத்தியது. இந்தியா ஃபிரட்டேர்னிட்டி ஃபோரம் என்பது ஜாதி , மத ,மொழி பேதமின்றி பஹ்ரைன் வாழ் இந்திய மக்களுக்காக சேவை செய்து வரும் ஒரு அமைப்பு.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பிரபல எழுத்தாளரும், ஆவணப்பட மற்றும் குறும்பட தயாரிப்பாளரும், பாபரி மஸ்ஜித் விஷயத்தில் கடந்த 20 வருடங்களாக முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கக் கூடியவருமான மனித உரிமை போராளி திரு.பாரதி கிருஷ்ணா குமார் அவர்கள் தனது உரையில் இந்துத்துவவாதிகள் ஆட்சியில் இல்லை என்றாலும் இந்துத்துவம் இன்னும் ஆட்சிப் பீடத்தில் தான் இருக்கின்றது என்றும் இந்தியாவில் பா.ஜ.க ஆட்சியில் இல்லாவிடினும் தாழ்த்தப்பட்டோருக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிரான ஃபாசிச மனோபாவம்தான் அரசின் எல்லா துறைகளிலும் ஆட்சியில் இருக்கின்றது என்றார். இந்துத்துவ சக்திகள் சாதாரண குடிமகன்களின் எண்ணங்களுக்கு விலங்கிட்டு விட்டு, கேடிகளுக்கு ஆட்சி அதிகாரத்தையும், சாதாரண குடிமக்களை எவ்வாறு இஸ்லாமியர்களுக்கு எதிராக திருப்பும் திட்டத்தோடு செயல்படுகிறது என்பதையும் விளக்கினார்.

சினிமாவிலும், அரசியலிலும் தேசப்பற்றை பற்றி பேசும் அனைவரும் தேசியவாதியுமல்ல; அரசியலில் இஸ்லாமியர்களின் நண்பர்களாக காட்டிகொள்ளும் அனைவரும் நண்பருமல்ல என்ற விழிப்புணர்வை இஸ்லாமியர்கள் அடைய வேண்டும் என்றார். மேலும் இந்துத்துவவாதிகள் தேசியக் கொடியை ஏந்தி வரும் முஸ்லிம்களை கண்டு பயப்படுவதை பற்றியும் இந்த தேசத்தை பீடித்துள்ள இந்துத்துவவம் என்ற நோயை விரட்ட அறிவு ரீதியான யுத்தத்திற்கு முஸ்லிம்கள் தயாராக வேண்டும் என்று கூறினார்.

சிறப்புரையாற்றிய NCHRO (தேசிய மனித உரிமை இயக்கங்களின் கூட்டமைப்பு)ன் தமிழக துணைத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சகோதரர் M .G .K .நிஜாமுதீன் அவர்கள், இந்துத்துவ சக்திகள் இஸ்லாமியர்களை தீவிரவாதி என்ற ஒற்றை வார்த்தைகளை கொண்டு பின்னடைய செய்கிறார்கள் என்றார். இஸ்லாமியர்களிடையே உள்ள அறியாமையை ஆணித்தரமாக சாடிய அவர் பத்திரிகை மற்றும் அரசியலில் இஸ்லாமியர்கள் சாதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார்.

இந்திய முஸ்லிம்கள் பின்தங்கி உள்ளமைக்கு காரணம் அறியாமையும், பரந்த சிந்தனை இல்லாமையும் , பரந்த தொடர்பில்லாமையும் தான் என்றும் முஸ்லிம்களைக் காட்டிலும் குறைவான சதவீதம் உள்ள பிற சமுதாயத்தவர்கள் எல்லா உரிமைகளும் பெற்று வாழும் போது முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்படுவதற்கு காரணம் முஸ்லிம்களிடம் உள்ள ஒற்றுமையின்மைதான் என்றும் முஸ்லிம்கள் எல்லா சமூகத்துடனும் பரந்த தொடர்பு உள்ளவர்களாக இருக்க வேண்டும் என உரையாற்றினார்

24.1.11

டாக்டர் சென்னின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று. விசாரணையை கண்காணிக்க அனுமதிக்க வேண்டுமென ஐரோப்பிய யூனியன்

புதுடெல்லி,ஜன.24:அநியாயமாக தேசத்துரோக குற்றஞ்சாட்டி, ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட மனித உரிமை ஆர்வலர் டாக்டர் பினாயக் சென்னின் மேல்முறையீட்டு மனுவை சட்டீஷ்கர் உயர்நீதிமன்றம் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறது.

மேல்முறையீட்டு மனு விசாரணையை கண்காணிக்க தங்கள் பிரதிநிதிகளை அனுமதிக்க வேண்டுமென ஐரோப்பிய யூனியன் இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பெல்ஜியம், டென்மார்க், ஜெர்மனி, ஹங்கரி,பிரான்சு, சுவீடன், பிரிட்டன் ஆகிய நாடுகளின் தூதரக அதிகாரிகளை நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என கோரியதாக ஐரோப்பிய யூனியனின் பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.

சென்னின் சிறைத் தண்டனைக் குறித்து தங்களது கவலையை இந்திய அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளதாகவும் அக்குழு தெரிவிக்கிறது.

ஐரோப்பிய யூனியனின் கோரிக்கையை வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கும் சட்டீஷ்கர் மாநில அரசுக்கும் அளித்துள்ளது.

சட்டீஷ்கர் முதல்வர் ரமண் சிங் இதுத் தொடர்பான விபரங்களை உயர்நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

பினாயக் சென்னிற்கு ஆயுள்தண்டனை விதித்தைக் கண்டித்து இந்தியாவிலும், வெளிநாட்டிலும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
இந்த இடுகை(post)தங்களை கவர்ந்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி

திரைத் துறையினரை ஆட்சிக்கு வர அனுமதிக்கக்கூடாது: ராமதாஸ் அதிரடி!

"தமிழகத்தில் இனிமேல் திரைத்துறையினரை ஆட்சிக்கு வர அனுமதிக்கக்கூடாது. இளைஞர்களை அம்மாயையிலிருந்து திருப்பி பாமகவில் இணைக்க முயற்சிக்க வேண்டும்" என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கட்சி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,
"தமிழகத்தில் 1967ம் ஆண்டுக்குப் பிறகு திரைத்துறை தொடர்பானவர்தான் முதல்வராகின்றனர். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நடிகர்கள் நாடாள வேண்டும் என்று நினைக்கவில்லை. அப்படி நினைத்தாலும் அது போணியாகாது. விதி விலக்காக 10 ஆண்டுக்கு முன் வரை ஆந்திர மாநிலத்தில் நடிகர் ராமராவ் முதல்வராக இருந்தார். இங்கு மட்டும் தான் இந்தக்கூத்து தொடர்கிறது.
சினிமா நடிகர்கள் மாயையிலிருந்து இளைஞர்களை விடுவித்து பாமக - வில் அவர்களை இணைக்க, கிராமங்கள் தோறும் பாமக கிளை அலுவலகங்கள் ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் 1967 வரை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. 67க்குப் பிறகு திரைத்துறையிலிருந்து வந்த அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி நடத்தினர்.
தற்போது திரைத் துறையில் உள்ள விஜயகாந்த் போன்றோர் தமிழக ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். இதுபோன்ற எண்ணங்களுக்கு இளைஞர்கள் வாய்ப்பளித்துவிடக் கூடாது. இந்த நிலையை மாற்ற பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஒவ்வொரு கிராமத்திலும் 5 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். கல்வி, விளையாட்டு, விவசாயம், நூலகம், மருத்துவத்துக்கு எனக் குழுக்களை அமைக்க வேண்டும்.
வளர்ந்து வரும் இளம் தலைமுறையினருக்கும் கிராம மக்களுக்கும் இந்தக் குழுவினர் வழிகாட்ட வேண்டும். இதுபோன்ற செயல்களை மேற்கொண்டால் இளைஞர்கள் அசைக்க முடியாத சக்தியாக இருப்பர்" என்று பேசினார்.
  இந்த இடுகை(post)தங்களை கவர்ந்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி