தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.1.11

உலகின் உயரமான உணவகம் (ஓட்டல்) துபாயில் திறப்பு

துபாய் :  உலகின்  மிக உயரமான  உணவகம் துபாயில்  உள்ள உலகத்தின் மிக  உயரமான கட்டிடமான  புர்ஜ் கலிபாவில் உள்ள 122 வது மாடியில் உள்ளது. பூமியிலிருந்து 442 மீட்டர் உயரமுள்ள          அவ்வுணவகம் பொது மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.
882 மீட்டர் உயரமுள்ள பர்ஜ் கலிபாவில் அமைந்துள்ள “அட்மாஸ்பியர்” என பெயரிடப்பட்டுள்ள இவ்வுணவகம் (ஓட்டல்) நேற்று திறக்கப்பட்டது.  இந்த ஓட்டலுக்கென்று பிரத்யேகமாக உள்ள லிப்டின் மூலம் பர்ஜ் கலிபாவின் கார்பரேட் சூட் லாபியிலிருந்து நேரடியாக செல்லலாம்.
இதில் ஓரே சமயத்தில் 210 நபர்கள் உட்கார்ந்து அமீரகம் முழுமையும் அழகாய் பார்வையிட்டு கொண்டே உண்டு களிக்கலாம். ஆனால் இவ்வளவு வசதி கொண்ட இவ்வுணவகத்தில் ஒரு நபர் சாதாரணமாக சாப்பிட்டால் கூட சுமார் 8500 இந்திய ரூபாய் கொடுக்க வேண்டும். சரி உணவு சாப்பிடாமல் வெறும் தேநீர் மட்டும் சாப்பிட்டால் 100 டாலர் கொடுத்தால் போதும், அதாவது இந்திய மதிப்பில் வெறும் 4600 ரூபாய் கொடுக்க வேண்டும்.
முதல் இரண்டு நாட்களும் முழுமையாய் புக் செய்யப்பட்டு உள்ளதாக ஈமார் ஓட்டல் குழும தலைவர் மார்க் டார்டென் கூறினார். மேலும் இந்த ஓட்டல் இத்துறைக்கே முன்னோடியாய் திகழும் என்றும் கூறினார். 1030 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள இது உலகின் இரண்டாம் உயரமான ரெஸ்டாரெண்டான சிஎன் டவரில் உள்ள சுழலும் 360 ரெஸ்டாரெண்டை விட 92 மீட்டர் உயரமானது.

0 கருத்துகள்: