தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.7.11

ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவில் சொத்து யாருக்கு சொந்தம்?


கேரளாவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு சொந்தமான பகுதியில் உள்ள ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள ரகசிய அறைகளிலிருந்து 90000 கோடி ரூபாய்களுக்கும் அதிகமான தங்கம், வெள்ளி நாணயங்கள், தங்கக்குடங்கள், வெள்ளிக் குடங்கள் என்று அளவிடற்கரிய பொக்கிஷங்கள் கிட்டியுள்ளன.

சிலர் அந்த பொக்கிஷம், தனவந்தர்களுக்கோ, அரசுக்கோ, குபேரர்களுக்கோ சொந்தமல்ல, குசெலர்களுக்குத்தான் (ஏழைகளுக்குத்தான் சொந்தம்) என்று சொல்கின்றனர். சிலரோ மற்ற மதத்தினரின் வழி பாட்டுத்தலங்களில் இப்படி பொக்கிஷங்கள் கிடைத்தால் இது போல் பங்கு வைப்பீர்களா? என்று கேட்கின்றனர்.

கேரளா முதல் அமைச்சர் உம்மன் சாண்டி இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்பார்ப்போம்அதுவரை கோவில் வளாகத்திலேயே நிரந்தரமாக காவல் சாவடி அமைத்து பொக்கிஷங்களை ரகசிய அறைகளிலேயே பாதுகாப்போம். என்று முடிவு செய்திருக்கிறார்.
திருவிதாங்கூர் ராஜ பரம்பரையோ கோர்ட் தீர்ப்பு வரும்வரை நாங்கள் எதுவும் சொல்லமாட்டோம் என்று தெரிவித்திருக்கின்றனர்.

பொக்கிஷங்களை ஏன் அந்தக்காலத்தில் கோவில்களில் பாதுகாத்தனர்? பொதுவாக அந்தக்காலத்திலே இரு நாடுகளுக்கு போர் மூண்டால் அரண்மனை கஜானாக்களை கொள்ளை அடிப்பதில்தான் எல்லா ராஜாக்களும் கவனமாக இருப்பார்கள். இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவன் என்ற பேதம் எல்லாம் இல்லை,

எனவே அடுத்த நாட்டு அரசனுக்கு பயந்தும் உள்ளூர் திருடர்களுக்கு பயந்தும்(அரண்மனை திருடர்களுக்கு பயந்தும்) கோவிலில்தான் எல்லா அரசர்களும் ரகசிய அறைகளை உருவாக்கி பொக்கிஷங்களை பாதுகாத்து வந்திருக்கின்றனர். நம் இந்திய வரலாற்றை புரட்டி பார்த்தோமானால் கஜனி முகமது சோமநாதர் ஆலயத்தை தகர்த்தார் என்ற செய்தியை பார்க்கலாம்.

கஜனி முகமதுவும் எல்லா மன்னர்களையும் போல்செல்வத்தின் மீது கொண்ட ஆசையின் காரணமாகத்தான் சோமநாத ஆலயத்தின் ரகசிய அறைகளை உடைத்து பொக்கிஷங்களை கொள்ளை அடித்தாரே தவிர கோவிலை உடைத்து நாசம் செய்யவேண்டும் என்றல்ல.
ஆர்.எஸ்.எஸ் சொல்வதுபோல் முஸ்லிம் மன்னர்கள் கோவில்களை இடித்தார்கள் இந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்தார்கள் என்பதெல்லாம் திரிக்கப்பட்ட செய்திகளை வரலாறு என்று தொகுக்கப்பட்டவற்றிலிருந்து எடுத்தது.

0 கருத்துகள்: