ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு முரணானது எனவும், அது ஒரு நோய் எனவும் இந்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
விக்யான் பவனில் எச்.ஐ.வி/எயிட்ஸ் சம்பந்தமாக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர், இது தொடர்பில் கருத்துரைத்தார்
ஆண் ஆணுடன் உறவு வைத்துக்கொள்ளும்
இயற்கைக்கு முரணான கலாச்சாரம் மேற்கத்தேய நாடுகளில் தான் முன்பு இருந்தது. தற்போது அது இந்தியாவுக்கு ஊடுறுவியுள்ளது. இதனை எதிர்கொள்ள இந்தியச்சமூகம் தயாராகவேண்டும். நாளுக்கு நாள் இந்நடத்தை உள்ள நபர்கள் இங்கு அதிகரித்து வருகிறார்கள்.பெண் பாலியல் தொழிலாளிகளை கண்டறிந்து செக்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் பார்க்க, ஓரின சேர்க்கையாளர்களை கண்டறிவது மிக கடினமான விடயம்.
இது குறித்து செக்ஸ் கல்வியை பரவலாக்குவது அவசியம்
என அவர் தெரிவித்தார். இவ்விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
எனினும் ஓரின சேர்க்கையாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய வழிகாட்டல்களை செய்து வரும் NACO அமைப்பு, அமைச்சரின் கருத்துக்களை மறுத்துள்ள்ளது.
ஓரின சேர்க்கை என்பது ஒரு நோயல்ல. அது இயற்கைக்கு முரணானதும் அல்ல. அது ஒரு பாலியல் நோக்கு நிலையின் வடிவம் மட்டுமே என அந்த அமைப்பு சுட்டிக்கட்டியுள்ளது.
அந்த அமைப்பின் புள்ளி விபரப்படி இந்தியாவில், 4.12 இலட்சம் MSM (ஆண்-ஆண் உறவு) நபர்கள் இருப்பதாகவும் அதில் 2.74 இலட்சம் பேர் அடையாளம் கணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சென்னை, ஆந்திர பிரதேஷ், குஜராத், தமிழ்நாடு, ஒரிஸ்ஸா ஆகிய பகுதிகளில் இவ்வாறான நபர்கள் அதிகமாக இனங்காணப்படுவதாகவும், இவர்களை சரியான முறையில் வழிநடத்தவென உருவாக்கப்பட்டுள்ள TI அமைப்பு, சுமார் 1000க்கு மேற்பட்ட ஓரின சேர்க்கையாளர்களை பராமறித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இந்தியாவில் எயிட்ஸ் உயிர்கொல்லி நோய் வேகமாக பரவுவதில், 9.2% வீதமான போதை மருந்து பாவணையாளர்களும், 7.3% MSM நபர்களும், 4.9% பாலியல் தொழிலாளிகளும் பங்களிப்பு செலுத்துவதாக NASO அமைப்பின் புள்ளிவிபரம் கூறுகிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக