சென்னை தீவுத்திடல் அருகேயுள்ள ராணுவ குடியிருப்பில் பழம் பறிக்கச்சென்ற சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி நடத்திவரும் விசாரணையில் முன்னேற்றமில்லை.
சென்னை தீவுத்திடலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தன்று தனது நண்பர்களுடன் அருகிலுள்ள ராணுவகுடியிருப்பில் பழம்
பறிக்கச் சென்ற
தில்ஷான் என்ற 13 வயது சிறுவன் ராணுவ வீரர் ஒருவர் வெறித்தனமான செயலால் படுகொலைச்செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவனின் படுகொலைக்கு பலதரப்பிலிருந்தும் கடும் கண்டனம் எழுந்தது.

இதைத்தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணை சி.பி.சி.ஐ.டியிடம் ஒப்படைக்கப்பட்டது. லெஃப்டினண்ட் அந்தஸ்திலுள்ள ஒரு அதிகாரியிடம் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுத்தொடர்பான கேள்விக்கு சி.பி.சி.ஐ.டி ஆர்.சேகர் பதிலளிக்கவில்லை. விசாரணை நடைபெறுவதாகவும், ஊகிக்க முடியவில்லை எனவும் அவர் பதிலளித்துள்ளார். ராணுவ அதிகாரிகளிடம் விசாரணை நடத்த ராணுவத்திடம் அனுமதி கோரப்படுமா என்ற கேள்விக்கு, விசாரணைக்கு ராணுவம் அனைத்து வகையான ஒத்துழைப்பையும் வாக்குறுதியளித்துள்ளதாக சேகர் பதிலளித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக