தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.12.12

GMR விமான நிலையத்தை மாலைதீவு அரசு பொறுப்பில் எடுத்தது செல்லாது : சிங்கப்பூர் நீதிமன்றம்


மாலைதீவுகளில் இந்திய ஜி.எம்.ஆர் நிறுவனம் அ மைக்கவிருந்த விமான நிலைய திட்டத்தை, அந்நா ட்டு அரசு இரத்து செய்தமை செல்லாது என சிங்கப் பூர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.மாலைதீவுகளி ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் போது குறித்த விமா ன நிலையம் அமைக்க லஞ்சம் கொடுத்து டெண்டர் பெறப்பட்டதாக குற்றம் சாட்டி ஜி.எம்.ஆர் நிறுவனத் தின் விமான நிலைய விரிவாக்க
திட்டப்பணிக்கு அ ந்நாட்டு அரசு தடை விதித்து,விமான நிலையத்தை தனது பொறுப்பில் எடுத்தி ருந்தது.

எனினும் இந்நடவடிக்கையை எதிர்த்து சிங்கப்பூர் நீதிமன்றத்தில் ஜி.எம்.ஆர் நிறுவனம் மனுத்தாக்கல் செய்தது. இன்று வெளியான நீதிமன்ற முடிவுகளின் படி, மாலைதீவு அரசு திட்டத்தை இரத்து செய்தது செல்லாது என அறிவித்தது. இது தமக்கு கிடைத்த வெற்றியாகும் என கூறியுள்ள ஜி.எம்.ஆர் நிறுவனம், விமான நிலையத்தின் நாளாந்த நடவடிக்கைகளை தாமே தொடர்ந்து நடத்த போவதாக அறிவித்துள்ளது.

ஆனால் இந்நீதிமன்ற உத்தரவையும் மீறி மாலைதீவு அரசு விமானநிலையத்தை தன் பொறுப்பின் கீழே தொடர்ந்து வைத்திருப்பதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும், இவ்விமான நிலைய மேம்பாட்டு திட்டத்தை நாம் ஜி.எம்.ஆர் நிறுவனத்திற்கு கொடுக்க போவதில்லை என மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் மொஹ்மட் நசீம் தெரிவித்துள்ளார்.

511 மில்லியன் டாலர் பெறுமதியில் போடப்பட்டிருந்த இத்திட்டம், மாலைதீவில் முதலீடு செய்யப்பட்ட மிகப்பெரிய வெளிநாட்டு திட்டமாக கருதப்பட்டது.  2010 இல் மொஹ்மட் நசீத் அரசின் தலமையின் கீழ் ஜி.எம்.ஆர் நிறுவனத்துடன் இத்திட்டம் போடப்பட்டிருந்தது.

0 கருத்துகள்: