தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.12.12

இஸ்ரேல் நிலை தடுமாறி உலக சமுதாயத்தை பகைக்க ஆரம்பித்துள்ளது.


பாலஸ்தீனத்திற்கு ஐ.நாவில் உறுப்புரிமை வழங்கி யதை பொறுக்க முடியாத இஸ்ரேல் நிலை தடுமாறி உலக சமுதாயத்தை பகைக்க ஆரம்பித்துள்ளது.இ ஸ்ரேலிய பிரதமர் நெட்டன் யாகு பாலஸ்தீன வட் டகையில் ஆக்கிரமிப்பு குடியிருப்புக்களை அமைப் பது தொடரும் என்று கூறியுள்ளார்.பாலஸ்தீனம் எ ன்ற நாடே உருவாக முடியாமல் கட்டிடங்களால் து ண்டு போடும் ஆக்கிரமிப்பை அரங்கேற்றியுள்ளது இ ஸ்ரேல்.மேலும் இறுதிச் சுற்று பேச்சுக்களில் பால ஸ்தீனத்தின் தலைநகர்
அமையக்கூடிய எருசெலேத்தை முற்றாக வளைத்து தலைநகரை சூறையாடியுள்ளது.
சர்வதேச விதிகளை மீறி, உலக நாடுகளை அவமதிக்கும் இஸ்ரேலின் இந்தச் செயல் பிரான்ஸ் – இங்கிலாந்து போன்ற வல்லரசு நாடுகளுக்கு கடும் கோபத்தை விளைவித்துள்ளது.
ஒரு புறம் இந்த நாடுகள் இஸ்ரேலில் உள்ள தமது நாட்டின் இஸ்ரேலிய தூதரர்களை உடனடியாக பேச வரும்படி அழைப்பு விடுத்துள்ளன.
அதேவேளை மறுபுறம் தமது நாட்டில் உள்ள இஸ்ரேலிய தூதர்களையும் அழைத்து தமது கடும் அதிருப்தியையும், சீற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளன.
மேற்குக் கரைப்பகுதியை வடக்க தெற்காக கூறு போட்டு துண்டாடும் வகையில் பல ஆக்கிரமிப்புக் கட்டிடங்கள் அமைக்கப்படுகின்றன.
இதேபோல கோபமடைந்த சுவீடனும் இஸ்ரேலிய தூதுவரை உடனடியாக அழைத்து தமது கடும் சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.
ஐ.நாவில் பாலஸ்தீனத்தை அங்கீகரித்து தீர்மானம் எடுக்கப்பட்டுவிட்டது, ஆகவே இத்தகைய குடியிருப்புக்கள் சர்வதேச சட்டத்திற்கு முரணானவை என்று சுவீடன் சுட்டிக்காட்டியுள்ளது.
சற்று முன்னர் சுமார் 15.00 மணியளவில் டேனிஸ் வெளிநாட்டு அமைச்சர் வில்லி சுவிண்டேலும் இஸ்ரேலிய தூதுவரை அழைத்து தமது அதிருப்தியையும் கவலையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
உலக நாடுகள் கடும் கோபமடைந்துள்ள நிலையிலும் இஸ்ரேல் அடிபணிய மறுத்துள்ளது.
இஸ்ரேலியரின் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த பாலஸ்தீனர் ஒருவரை இஸ்ரேலிய படைகள் கோடரியால் கொத்திக் கொன்றுள்ளன.
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானிக்க இருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தண்டனையை இஸ்ரேல் பெற்றுக் கொள்ளும் பருவம் வந்துவிட்டது.
விவகாரம் நிமிடத்திற்கு நிமிடம் சூடேறிச் செல்கிறது.

0 கருத்துகள்: