தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.12.12

டேனிஸ் மொழியில் இருந்து தமிழ் மொழியில் தங்கமான தகவல்கள்..


டேனிஸ் மொழியில் வெளியான 1001 தகவல்களில் இ ருந்து மொழி பெயர்ப்பாகிறது..part 01 . 01. சூரியக் குடும் பத்தை 1: 20.000.000.000 என்ற அளவுத்திட்டத்தில் வரை ந்தால் சூரியனுடைய பருமன் ஒரு தோடம்பழத்தளவு ( 7.செ.மீ. விட்டம் ) வரும். அதேவேளை சூரியனுக்கும் பூ மிக்கும் இடைத்தூரம் 7.5 மீட்டர்களாக இருக்கும்.02. கொலாஸ்ரிடியம் ( Clostridium ) என்ற பக்டீரியாதான் உ லகத்திலேயே மோசமான நச்சுத்தன்மை கொண்டதா கும். இதை சுமார் ஒரு கிராம் அளவு
கலந்து கொடுத்தா ல் உலகில் உள்ள அத்தனைமனிதர்களையும் கொன்றுவிடலாம்.
03. கடிகாரத்தின் மணி, நிமிடம், விநாடிக் கம்பிகள் மூன்றும் ஒரேயிடத்தில் சந்திக்கும் தருணம் ஒரு நாளில் இரண்டு மட்டுமே உண்டு அவை : நள்ளிரவு : 00.00.00 நடுப்பகல் 12.00.00 மற்றய நேரங்களில் மூன்றும் ஒன்றாக சந்திக்காது.
04. உலகத்திலேயே மிக மிக மெல்லியதாக உருக்கித் தகடாக்கக் கூடிய உலோகம் தங்கமாகும். கடதாசி வடிவில் தங்கத்தை தகடாக்கி புகைப்பட சட்டங்களுக்கு தங்கத்தகடு போடுகிறார்கள். இதற்காக தங்கத்தை 0.000083 மி.மீ. தடிப்பில் தகடாக அடிக்கிறார்கள், இது கடதாசியின் தடிப்பைவிட 1200 தடவைகள் மெல்லியதாகும்.
05. பூமிப்பந்தில் உள்ள தாவரங்களை அவதானித்தால் 85 வீதமான தாவரங்கள் கடலின் அடியிலேயே இருக்கின்றன. மிகுதி 15 வீதம் மட்டுமே தரையில் நாம் காணும் பசுமை மிக்க தாவரங்களாகும்.
06. உலகத்தின் அதிக விலையுள்ள காப்பி இந்தோனிசியாவில் உள்ள சுமாத்திராவில் உற்பத்தியாகிறது. சிறுகுடல், பெருங்குடல் தொகுதிக்கு இது பலத்த ஆரோக்கியமளிக்கும் இந்த காப்பியின் பெயர் காப்பி லூவாக் என்பதாகும், விலை கிலோ 30.000 இந்திய ரூபா.
07. ஒளியின் வேகம் செக்கனுக்கு 299.792 கி.மீட்டர்களாகும். ஒளியின் வேகத்தில் ஓடினால் கடக்கக்கூடிய வருடாந்தத் தூரம் : 9.461.000.000.000 கி.மீட்டர்களாகும்.
08. உலகத்தின் புகழ்பெற்ற ஓவியர் பப்லோ பிக்காசோ பிறந்தபோது இறந்துவிட்டதாக கருதப்பட்டார். இறந்த குழந்தையை மேசையில் போட்டுவிட்டு மருத்துவத்தாதி வெளியே போய்விட்டார். அந்த நேரம் அங்கு வந்த அவருடைய மாமன் குழந்தை இழந்த கவலையால் ஒரு சிகரட்டை கொழுத்தி தம்கட்டி புகையை வெளியே விட்டார். காரமான சிகரட் புகை நாசில் முட்டியதால் குழந்தை குக்கியது.. அப்போதுதான் அவர் உயிருடன் இருப்பது தெரிந்தது. உலகத்தின் மாபெரும் ஓவியனை உயிர் பிழைக்க வைத்த சிகரட் புகைதான் பல கோடி மனிதர்களை கொன்றொழித்துள்ளது. வாழ வேண்டியவர்களை வாழ வைப்பதும், வாழக்கூடாதவர்களை கொன்றொழிப்பதும் சிகரட் புகைதான்.
09. உலகத்திலேயே மிகவும் பாரமான விமானம் ரஸ்யாவில் தயாரான அன்ரனோவ் ஏ.என்.225 ஆகும். இந்த விமானம் ஆளில்லாத போயிங் 747 இரக விமானத்தை தோளில் சுமந்தபடி இலகுவாக பறப்பெடுக்கும் இராட்சத வலுக் கொண்டது.
10. உலகத்தின் முதலாவது கணினி உருவாக்கப்பட்டபோது அது ஒரு விளையாட்டு மைதானமளவுக்கு பெரியதாக வயர்களினால் நிறைந்து கிடந்தது. அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் இது செய்யப்பட்டது. ஆனால் இதே இயந்திரம் முழுவதுமே இன்று ஒரு கைக்கடிகாரம் அளவுக்குள் சிறியதாக வடிவமைக்கப்பட்டுவிட்டன. முதலில் முயன்றால்தான் இலக்கை எட்டித்தொட முடியும்.
11. அமேசன் காடுகளில் வருடந்தோறும் 6000 தடவைகள் காட்டுத்தீ பரவுகிறது, இதனால் வளிமண்டலத்திற்குள் ஒரு பில்லியன் கோடி கனமீட்டர் கரியமிலவாயு உந்தித் தள்ளப்படுகிறது. சற்லைற் படங்கள் பல மில்லியன் சதுரகி.மீ தூரத்திற்கு இந்தப் புகைகள் வான் வெளியில் பரவிக்கிடப்பதைக் காட்டுகிறது.
12. பால்வெளியில் சுமார் 100 பில்லியன் நட்சத்திரங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் ஒரு வட்டத்தட்டுபோல சுற்றுகின்றன. இவற்றை ஓர் அந்தத்தில் இருந்து இன்னொரு அந்தத்திற்கு ஊடறுத்து செல்ல 100.000 ஒளி வருடங்கள் ஆகும். மிக அருகில் உள்ள ஒரு நட்சத்திரத்திற்கு போவதாயின் 4.3 ஒளி வருடங்கள் ஆகும்.
13. நமது உடம்பில் மொத்தம் எட்டு வீதமே இரத்தம் உள்ளது. சுமார் 70 கிலோ எடையுள்ள ஒரு சாதாரண மனிதனுக்கு 5.6 லீட்டர் இரத்தம் உடமபு முழுவதும் ஓடிக்கொண்டிருக்கும்.
14. பிளேன்ட்றோம் என்பது ஒரு வசனமாகும், உதாரணமாக திகதி என்பதை வலப்பக்கமாக வாசித்தாலும், இடமிருந்து வலமாக வாசித்தாலும் திகதி என்ற சொல்லையே தரும், அதுபோலத்தான் இந்த வசனமும் அமைந்துள்ளது. இப்படி முன்புறமாக வாசித்தாலும், பின்புறமாக வாசிக்க ஆரம்பித்தாலும் ஒரே கருத்தைத் தரக்கூடிய சிறுகதை ஒன்றை பிரான்ஸ்சிய எழுத்தாளர் ஒருவர் எழுதியுள்ளார்.
15. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட லொக்கீட் எஸ்.ஆர்.71 என்ற விமானம் 26.2 கி.மீ உயரத்தில் பறக்கும் ஆற்றல் கொண்டது. இது ஒரு மணி நேரத்தில் 260.000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை படம்பிடித்து உளவறிந்துவிடும். இதை சுட்டுவிழுத்த முடியாது, ஆப்கானிஸ்தான், வியட்நாம், வடகொரியா, கியூபா போன்ற நாடுகளை தொடர்ந்து அவதானித்தபடி உள்ளன இந்த விமானங்கள். இதனுடைய வேகம் மணிக்கு 3520 கி.மீட்டராகும்.
16. 099.090.909.090.909.090.909.090.909.091 என்ற இலக்கம் உலகில் மிகவும் விஷேடமானது இதை எந்தவொரு இலக்கத்தாலும் பிரிக்க முடியாது, ஒன்றால் அல்லது அதே இலக்கத்தால் மட்டுமே பிரிக்க முடியும்.
17. உலகத்தின் மிக நீளமான மரதன் ஓட்டம் 200 கி.மீ தூரத்தைக் கொண்டதாக உள்ளது. மொறோக்கோ நாட்டின் பாலைவனத்தால் இது ஓடப்படுகிறது. இந்த ஓட்டம் நடைபெறும்போது வெப்பம் 58 பாகை பரனைற்றில் இருக்கும், வெறும் 8 பாகை பரனைற் மட்டுமே கூடிக்குறையும்.
18. நமது பால்வெளிக்கு மிக அண்மையில் உள்ள இன்னொரு பால்வெளி அன்ரோமீடா ஆகும். இதை எட்டித் தொடுவதாக இருந்தால் இரண்டு மில்லியன் ஒளி வருடங்கள் பயணிக்க வேண்டும். அதாவது 20 ட்ரிலியன் கிலோமீட்டர்கள் கடக்க வேண்டும்.
19. டென்மார்க்கில் ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கும் ஒரு தடவை வீடு உடைத்து திருட்டு நடைபெறுகிறது. வருடத்திற்கு 40.000 வீடு உடைப்பு திருட்டுக்கள் நடைபெறுகின்றன. நத்தார் பிறக்கும் இரவே அதிகமான திருட்டுக்கள் நடைபெறுகின்றன.
20. Billygoat பில்லிகோற் என்ற நெல்லிப்பழம் அவுஸ்திரேலியாவில் விளைகிறது, இதுவே உலகத்தில் அதி கூடிய விற்றமின் சீ உள்ள பழமாகும். சாதாரண தோடம்பழத்தைவிட 100 பங்கு அதிகம் விற்றமின் சீ உள்ளது.
அலைகள் மாஸ்ரர் பேஜ் 03.12.2012
மொத்தம் 1001 தகவல்கள் இத்தொடரில் வரப்போகிறது…
மொழிபெயர்ப்பு : கி.செ.துரை   நன்றி:அலைகள்

0 கருத்துகள்: