பாலஸ்தீனத்தைப் போலவே நேற்று தனிநாடு அந்த ஸ்த்து பெற்ற கொசோவாவிலும் பட்டாசு வெடிகள் அமர்க்களமாக வெடித்துத் தீர்க்கப்பட்டுள்ளன.ஒல் லாந்து – ஹேக் நகரில் உள்ள சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் இதுவரை போர்க்குற்றவாளியாக விசா ரிக்கப்பட்டு வந்த முன்னாள் கோசோவா பிரதமர் ராமுஸ் கராட்டினாஜ் குற்றவாளி இல்லை என்று வி டுவிக்கப்பட்டுள்ளார்.இவருடைய விடுதலை கொ சோவா நாட்டிற்குக் கிடைத்த மிகப்பெரிய சர்வதேச வெற்றியாகப் பார்க்கப்படு
கிறது.இதுபோல கடந்த இரண்டு வாரங்களுக்கு மு ன்னர் கோசோவா நாட்டின் ஜெனரலாக இருந்த அன்ரி கோற்றோவினாவையு ம் போர்க்குற்ற நீதிமன்று நிரபராதி என்று விடுவித்திருந்தது தெரிந்ததே.
இவ்வாறு போர்க்குற்றத்திற்காக கொசோவாவின் தரப்பில் விசாரிக்கப்பட்டவர்கள் விடுதலையாவதும் தமது தரப்பில் கைதானவர்கள் தண்டிக்கப்படுவதும் சேர்பியாவிற்கு பெரும் கோபத்தையும் தலைக்குனிவையும் ஏற்படுத்தியுள்ளது.
சேர்பிய தலைவர் சொலபடான் மிலோசெவிச் போர்க் குற்றவாளியாகக் காணப்பட்டு, சர்வதேச நீதிமன்றின் சிறைக் கொட்டடியிலேயே மரணித்துக் கிடந்தமை தெரிந்ததே.
அவர் குற்றவாளியாகி மரணிக்க இவர் விடுதலையானது கௌரவப் பிரச்சனையாக மாறும் என்பது தெரிந்ததே.
முன்னரே கோசோவா தனிநாடாக மாறுவதை கடுமையாக எதிர்த்து வந்த சேர்பியா இப்போது தனது கோபத்தை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றின் மீது காட்டமாக திருப்பியுள்ளது.
எவ்வாறாயினும் நேற்று நடந்த பாலஸ்தீன வாக்களிப்பு, கொசோவா முன்னாள் பிரதமர் விடுதலை என்பன உரிமைகளற்ற இனங்களுக்கு சர்பான காற்று உலக அரங்கில் வீசத் தொடங்கிவிட்டதையே காட்டுகிறது.
இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் எடுக்கப்பட்ட தவறான முடிவுகளால் பல இனங்கள் சொந்த நாடுகளை பெற முடியாது வஞ்சிக்கப்பட்டுவிட்டன, அதற்கு முழுப் பொறுப்பும் கூற வேண்டிய நிலை இப்போது ஐ.நாவுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தப் புதிய காற்று இப்போது மெல்லென வீச ஆரம்பித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக