முன்னாள் இந்தியப் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் இன்று காலமானார். அவருக்கு வயது 92.இவர், நுரையீரலில் ஏற்பட்டுள்ள தொற்று காரணமாக குர்கான் நகரில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருடைய உடல்நிலை மோசமடைந்ததால் அவருக்கு செயற்கை வாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று பிற்பகல் 3.27 மணிக்கு குஜ்ரால் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை அறிவித்தது.இந்தர் குமார் குஜ்ரால். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின்
மந்திரி சபையில் தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரியாக பதவி வகித்தார். காங்கிரசின் உடனான கருத்து வேறுபாடு காரணமாக, அக்கட்சியிலிருந்து வெளியேறி, 1980-ல் ஜனதா தளம் கட்சியில் இணைந்தார்.
இந்த நிலையில் 1989-90 மற்றும் 1996-98-ல் வெளியுறவுத்துறை மந்திரியாகவும், இதே ஆண்டில் திட்டக் கமிஷன் தலைவராகவும் பதவி வகித்தார். பின்பு 1997ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 1998 ஆம் ஆண்டு மார்ச் வரை, ஐ.கே.குஜ்ரால் இந்தியப் பிரதமாரக பதவி வகித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக