தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.12.12

தமிழ சட்டசபை வைர விழா-ஜனாதிபதி பெருமிதம்!


தமிழக சட்டப் பேரவை தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி, நேற்று நடைபெற்ற வைர விழா நிகழ்ச்சியில், இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.அப்போது  தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கள் குறித்து, குடியரசுத் தலைவர் பெருமிதத்தோடு எருத்துரைத்தார். அவர் பேசும்போது:தமிழ்நாடு மாநிலம் 1956-ல் உருவானது.  இந்த மாநிலத்தின் சட்டசபையானது, தமிழ்நாடு சட்டப்பேரவை என்று அழைக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில்
அ.தி.மு.க. தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றதையடுத்து, தற்போதைய 14-வது சட்டப்பேரவை 2011-ம் ஆண்டு மே மாதம் 16-ம்தேதி அமைக்கப்பட்டது. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டமன்றம் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ளது மிகவும் பெருமைக்குறியது.
இந்த சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இந்த மன்றத்தினை பல தலைவர்கள் அலங்கரித்திருக்கின்றனர். பலர் தேசியத் தலைவர்களாக உயர்ந்துள்ளனர். சட்டசபை ஒப்புதல் இல்லாமல் எந்த வரி விதிப்பும் அமல்படுத்த முடியாது. சஞ்சீவ் ரெட்டி, சி. சுப்ரமணியம் போன்றவர்கள் பணியாற்றிய சிறப்பு பெற்றது, என பெருமிதத்துடன் கூறினார்.
முன்னதாக இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஒரு நிமிடம் மவுனம் கடைபிடிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து அனைவரும் எழுந்து நின்று முனனாள் பிரதமர் குஜ்ரால் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

0 கருத்துகள்: