தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.11.12

இன்று பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க ஐரோப்பிய ஒன்றியம் தயார்


அமெரிக்கா பாலஸ்தீனத்தை பிரசவிக்க முடியாத ம லடி என்பதை உணர்ந்த உலகம்..ஐ.நாசபையில் பால ஸ்தீனத்திற்கு தனிநாட்டு அந்தஸ்த்து வழங்குவதற் கு முதற்படியான Observer status கண்காணிப்பாளர் த கமைகாண் வாக்களிப்பு நடைபெற இருக்கிறது.இந்த வாக்கெடுப்பில் பாலஸ்தீனர்களின் உரிமைக்காக வாக்களிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரிய நாடா ன பிரான்ஸ் முடிவு செய்துவிட்டது.இதுபோல இன் னொரு பெரிய நாடான பிரிட்டன் அமெரிக்காவுடன் கொண்ட நட்புறவு காரணமா
க இதுவரை முடிவெடுக்காமல் தடுமாறி வருகி றது.
அதேவேளை நேற்றுவரை சிறிய தடுமாற்றத்தில் இருந்த டென்மார்க் நாளை பாலஸ்தீனத்திற்கு சார்பாக வாக்களிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
டென்மார்க், நோர்வே, சுவீடன் ஆகிய ஸ்கன்டிநேவிய நாடுகள் இதற்கான பேச்சுக்களை நடாத்திய பின்னர் இந்த முடிவை எடுத்துள்ளன.
இதுபோல சுவிற்சலாந்து, போத்துக்கல் போன்ற நாடுகளும் பாலஸ்தீனத்திற்கு ஐ.நாவில் உறுப்புரிமை வழங்கும் பிரேரணைக்கு ஆதரவு வழங்க இருக்கின்றன.
மறுபுறம் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டாம் என்ற எச்சரிக்கைக் கடிதம் ஒன்று அமெரிக்க வெளிநாட்டு அமைச்சகத்திடமிருந்து டென்மார்க்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் அதைப் புறந்தள்ளி இந்த வரலாற்றுப் புகழ் மிக்க முடிவை டென்மார்க்கும் இதர நாடுகளும் எடுக்கின்றன.
அமெரிக்காவை பகைக்கும் செயல் இதில் இருப்பதால் டென்மார்க்கில் உள்ள டேனிஸ் மக்கள் கட்சி டென்மார்க் ஆதரவளிப்பதை கண்டித்துள்ளது.
நேரடியாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் கலந்தாலோசிக்காமல் இப்படியொரு முடிவுக்கு வருவது அமெரிக்க இஸ்ரேலிய உறவைப் பாதிக்கும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் அக்கட்சியின் வெளிநாட்டு பிரிவு தவிசாளர் சோன் எஸ்பர்சன் கூறும்போது பாலஸ்தீனத்தின் பூரண விடுதலைக்கு இந்தத் தீர்மானத்தால் பயன் எதுவும் கிடைக்காது என்றும் தெரிவித்தார்.
ஆனால் அக்கட்சியுடன் இணைந்து கூட்டரசாங்கம் நடாத்திய வென்ஸ்ர, கொன்ஸ்சவேட்டிவ் இதை வரவேற்றுள்ளன.
இதுகுறித்து கருத்துரைத்த பாலஸ்தீன – டேனிஸ் நட்புறவுக்கழகத்தின் தலைவர் டென்மார்க்கின் இந்த முடிவு தமக்கு பெரு மகிழ்ச்சி தருவதாக தெரிவித்தார்.
டேனிஸ் குடியுரிமை பெற்றுள்ள தான் இப்போது ஒரு டேனிஸ்காரன் என்று சொல்வதில் பெருமைப்படுவதாகவும் கூறினார்.
பாலஸ்தீனத்தை பெருந்தொகையான நாடுகள் ஆதரிக்கவுள்ளன, பாலஸ்தீனம் முழுமையான தனிநாடாக மலர இது போதியதல்ல என்றாலும், பாலஸ்தீனம் தனிநாடாக மலர்வதற்கான தரமுயர்த்தலில் முக்கிய படிக்கட்டாக அமையும்.
பாலஸ்தீன பிரச்சனையை ஒரு தீர்வுக்குக் கொண்டுவர அமெரிக்காவால் இதுவரை முடியவில்லை, ஆகவே அமெரிக்காவிற்காக காத்திருப்பதில் பயனும் இல்லை என்ற நிலைக்கு ஒலக நாடுகள் வந்துள்ளன.
பாலஸ்தீன குழந்தையை பெற முடியாத மலடியான அமெரிக்காவிற்காவின் கோபம் அர்த்தமற்றது என்ற நிலைக்கு உலக சமுதாயம் வந்துள்ளது.
பிரச்சனை தொடர்கிறது, நமக்கும் மாற்றுவழி தெரியவில்லை ஆகவே பாலஸ்தீனத்திற்கு ஐ.நாவிலாவது ஒரு மதிப்பு கிடைக்க ஆவன செய்ய முடிவு செய்துள்ளோம் என்று டேனிஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லி சுவிண்டேல் தெரிவித்தார்.

0 கருத்துகள்: