தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.11.12

இவ்வருடம் சென்னையில் ஹெல்மெட் அணியாமல் வாகன விபத்தில் பலியானவர்கள் 547


சென்னையில் இவ்வருட தொடக்கத்திலிருந்து  அக்டோபர் மாதம் வரை ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியவர்களில் 547 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்ப தாக அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ள சென்னை மாநகர கா வல்துறை,இவ்விபத்துக்களை தடுக்கும் பொருட்டு ஹெல் மெட் அணிவதை கட்டாயப்படுத்த முடிவு செய்துள்ளதாக அ றிவித்துள்ளது. இது குறித்து சென்னை காவல்துறை தனது செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,சென்னையில் 40 லட் சம்
வாகனங்கள் ரோட்டில் ஓடுகின்றன. இவற்றில் 78 சதவீதம் அதாவது 29 ல ட்சத்து, 44 ஆயிரத்து 750 வாகனங்கள் இரண்டு சக்கர வாகனங்கள் ஆகும். கட ந்த 2011ம் ஆண்டு இரண்டு சக்கர வாகன ஓட்டுனர்கள் 683 பேர் விபத்தில் இறந் தனர். இவர்களில் ஹெல்மட் அணியாததால் 667 பேர் மாண்டுள்ளனர்.

இந்த ஆண்டு கடந்த அக்டோபர் மாதம் வரை இரண்டு சக்கர வாகன ஓட்டுனர்கள் 654 பேர் விபத்தில் பலியாகி இருக்கிறார்கள். இவர்களில் ஹெல்மட் இல்லாமல் வாகனம் ஓட்டி 547 பேர் இறந்திருக்கிறார்கள். இதுபோன்ற உயிர் இழப்புகளை தடுக்க, ஹெல்மட் அணிவதை கட்டாயமாக்க வாகன ஓட்டுனர்களிடம் தற்போது விழிப்புணர்வு பிரசாரம் நடந்து வருகிறது.

ஹெல்மட் கட்டாயம் அணிய வேண்டும். 2 சக்கர வாகனத்தில் 2 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும். குடித்துவிட்டு, அதிவேகமாக வாகனம் ஓட்டக்கூடாது என்பன போன்ற விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் போக்குவரத்து பிரச்சினைகளை தீர்க்க,  சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் ஆட்டோ டிரைவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மாகராட்சி, தொலைபேசி, மின்வாரியம் மற்றும் பேருந்து போக்குவரத்துக் கழக நிர்வாகத்தினர் ஆகியோருடன், சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் இனி கூட்டங்கள் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

0 கருத்துகள்: