தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.11.12

சிரிய எதிரணி போராளி குழுக்களுக்கு தலைமை தாங்க மதத் தலைவர் நியமனம்


சிரிய சர்வாதிகாரி ஆஸாட்டுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் போராளிக் குழுக்கள் அனைத்தையும் இணைக்கும் குடை அமைப்பிற்கு மோஸ் அல் கத்தீப் எ ன்ற மதத் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் சிரிய அதிபருக்கு எதிராக பல தடவைகள் கருத்துரைத்து சி றை சென்று, பின் அவருடைய கொலைக் கரங்களுக்கு ள் அகப்படாது நாட்டைவிட்டு தப்பி ஓடியவராகும்.அது மட்டுமல்லாமல் சிரிய தலைநகர் டமாஸ்கசில் அமை ந்திருக்கும் பிரமாண்டமா
ன உமாயா மசூதியின் முக்கிய தொடர்பாளராகவும் இருந்தவர்.
சன்னி முஸ்லீமான இவருடைய நியமனம் சிரியாவில் ஏற்படப்போகும் புதிய சுதந்திரத்திற்கு எதிரானது, போராளிகளின் எதிர்காலத்திற்கும் நன்மை தராது என்று எஸ்.என்.சி என்ற சிரிய நேஷனல் கவுன்சில் கூறியுள்ளது.
காரணம் சிரியாவில் பெரும்பான்மை சமுதாயம் சியா முஸ்லீம் பிரிவை சேர்ந்ததாகும்.
ஏற்கெனவே ஈரானில் நடைபெற்ற புரட்சி அயதொல்லா கொமெய்னி என்ற மதத் தலைவரின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டதால் உருவான சிக்கல் இப்போது கல்லியெடுக்க முடியாத அணு குண்டுக் கிழங்காக விளைந்திருப்பது இது போன்ற கவலைகள் தோன்றக் காரணமாகும்.
இது ஒருபுறம் போக, மறுபுறம் இஸ்ரேலிய படைகள் சிரியாவிற்குள் எச்சரிக்கை சூடுகளை நடாத்தி தாக்குதல் நடாத்தியுள்ளன, இதை ஐ.நா கண்டித்துள்ளது.
சிரியாவிலிருந்து லெபனான், இஸ்ரேல், ஜோர்டான் ஆகிய நாடுகளை பிரிக்கும் கோலான் மலைப்பகுதியில் சிரிய கிரனைட் தாக்குதல் நடந்த காரணத்தால் தமது பதில் தாக்குதல் இடம் பெற்றதாக இஸ்ரேல் தெரிவித்தது.
ஏற்கெனவே 1967 ம் ஆண்டு இப்பகுதியில் நடாத்திய தாக்குதல் காரணமாக சுமார் ஒரு லட்சம் மக்களை அடித்து விரட்டி கோலான் மலைப்பிரதேசத்தை கபளீகாரம் செய்துள்ள இஸ்ரேல் தனது மடியிலும் சிரியா கைவைத்துவிடுமோ என்ற பயத்தில் சூடுகளை நடாத்தியுள்ளது.
கடந்த 1973 ம் ஆண்டுக்குப் பிறகு சிரியாவிற்குள் இஸ்ரேலிய தாக்குதல்கள் இறங்கியுள்ளன, மறுபுறம் தனக்கான வில்லன் துருக்கியா இல்லை இஸ்ரேலா என்பதை சிரியா தொடர்ந்து ஆழம் பார்ப்பதும் இதுபோன்ற கிரனைட் தாக்குதல்களை நடாத்துவதும் வழமையாக இருக்கிறது.

0 கருத்துகள்: