தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.11.12

ஆப்கானிஸ்தானுக்கு ரூ.10,000 கோடி நிதியுதவி : இந்தியா வழங்குகிறது


அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கானி ஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய், டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். இதேவேளை போ ரால் நிலைகுலைந்துள்ள ஆப்கானின் மேம்பாட்டிற் காக ரூ. 10,000 கோடி நிதி அளிக்கப்படும் என்று பிரத மர் மன்மோகன் சிங் உறுதியளித்தார்.மேலும் உரம், நிலக்கரி, தாதுப்பொருட்கள் மற்றும் சிறு திட்டங்க ளை மேம்படுத்துவது தொடர்பாக 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. ஆப்கனுக்கு அறிவியல் துறைக ளில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறைகளில்
உதவ இந்தியா முடிவு செய்துள்ளது. இதன் போது  தங்கள் நாட்டில் அமைதியான சூழல் நிலவுவதால் இந்திய முதலீட்டாளர்கள் அங்கு தொழில் தொடங்க முன்வர வேண்டும் என்று ஹமீது கர்சாய் கேட்டுக்கொண்டார்.  மேலும் அவர் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தையும் சந்தித்துப் பேசினார்.  

பின்னர் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

பின்னர் பேசிய ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய், இந்தியாவின் உதவிகளை ஆப்கன் மக்கள் அறிந்திருக்கின்றனர். அவர்களுடைய வாழ்த்துக்களை நான் எடுத்து வந்துள்ளேன். இந்திய தொழிலதிபர்களை ஆப்கன் பக்கம் திரும்பச் செய்யும் பணிகளை மேற்கொள்ளவே இங்கு வந்துள்ளேன். இவ்விஷயத்தில் இரு நாடுகளும் ஒரே கருத்தைக் கொண்டுள்ளன என்று தெரிவித்தார். மேலும், பிரதமர் மன்மோகன் சிங் ஆப்கானிஸ்தானின் மிகச்சிறந்த நண்பர் என்றும் கூறினார்.
முன்னதாக, டில்லி வந்த கர்சாய்க்கு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி பிரணாப், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். கடந்த 9ம் தேதி மும்பை வந்த ஹமீத் கர்சாய், அங்கு தொழிலதிபர்கள் கூட்டத்தில் பேசுகையில், ஆப்கானிஸ்தானில் தொழில் துவங்க வரும் இந்திய தொழிலதிபர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

0 கருத்துகள்: