தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.11.12

ISS உடன் பேச்சு தோல்வி? 2013 ஜூனில் விண்ணுக்கு மனிதனை அனுப்ப சீனா திட்டம்


எதிர்வரும் 2013 ஜூனில் ஷென்ஷொவு -10 எனும் வி ண்கலத்தின் மூலம் விண்ணுக்கு மனிதனை அனுப்ப சீனா திட்டமிட்டிருப்பதாக சீன வான் ஆராய்ச்சிக் க ழகம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளது.ஏற்கனவே நிகழ்த்தப் பட்ட ஷென்ஷொவு-9 செயற்திட்டத்தைப் போலவே இப் பயணத்தின் போதும் இரு ஆண் விண் வெளி வீரர்களும்  ஒரு வீராங்கணையும் இதில் பங் கேற்க உள்ளனர்.இந்த பயணத்தின் போது விண்ணி ல் பூமியைச் சுற்றி வரும்
டியான்கொங் -1 எனும் ஆ ராய்ச்சிக் கூடத்தை வீரர்கள் சென்றடையவுள்ளனர். சுமார் 15 நாட்கள் இதில் தங்கியிருந்து தமது விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவுள்ள இவர்கள் பூமியிலுள்ள அவதானிகளுக்கு விஞ்ஞானப் பேருரைகளும் ஆற்றவுள்ளனர்.இச்செயற்திட்டத்தின் வெற்றி நாசாவின் சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்தை போன்றே சீனாவும் ஒரு ஸ்பேஸ் லேப்பை அல்லது பணியாற்றும் நிலையத்தை உருவாக்க வழிகோலும் எனக் கருதப்படுகின்றது.

உலகில் விண்ணுக்கு மனிதனை செலுத்திய நாடுகள் மொத்தம் 3 ஆகும். இதில் அமெரிக்கா, ரஷ்யா ஆகியவற்றை அடுத்து இறுதியாக 2003 இல் விண்ணுக்கு மனிதனை செலுத்தியதன் மூலம் சீனாவும் இடம்பிடித்தது. இந்நிலையில் விண்வெளி ஆராய்ச்சியில் வேகமாக முன்னேறி வரும் சீனா 2020 இற்குள் ஒரு செய்மதி ஆய்வு கூடத்தை நிறுவுவதற்கும் சந்திரனுக்கு மனிதனை அனுப்புவதற்கும் திட்டமிட்டுள்ளது.


இதேவேளை ISS எனப்படும் சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்துடன் சீனாவும் இணைய வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் பயனளிக்கவில்லை. இக்காரணத்தால் சீனாவின் தன்னிச்சையான இந்த ஸ்பேஸ் லேப் செயற்திட்டம் பீஜிங் மற்றும் வாஷிங்டனுக்கு இடையேயான அரசியல் முறுகலை ஏற்படுத்தியிருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்: