இடிந்தகரையில் தொடர்ந்து பரபரப்பு தொடர்ந்தவண்ணமே செல்கிறது. தற்போது அங்கிருக்கும் மக்கள் தங்கள் கோரிக்கை நிறைவு பெரும் வரை அங்கிருந்து நகர மாட்டோம் என அங்கேயே அவர்கள் தங்குவதற்கு இடங்களை ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார்கள். மற்றும் அவர்களுக்கு உணவு வசதிகளும் மக்கள்களே மக்கள்களுக்கு வழங்குகின்றனர்.தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அறிக்கையில் அங்கிருக்கும் மக்களை எந்த சந்தர்ப்பத்திலும் துன்புறு
த்தக்கூடாது என்று கூறியிருக்கிறார்.
த்தக்கூடாது என்று கூறியிருக்கிறார்.
அது அவ்வாறு இருக்க தற்போது மக்களை கண்காணிக்கும் வகையில் ரோந்து விமானங்கள் மூலம் இடிந்தகரை மற்றும் மக்கள் இருக்கும் பகுதிகளை வட்டமிட்டுக்கொண்டிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
அதுமட்டுமின்றி மக்களை கைது செய்யும் நடவடிக்கையினையும் மேற்கொள்ள அரசு திட்டமிட்டு வருவதாகவும் அதற்கு இருபதுக்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளும் வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக