ஸ்ரீஹரிகோட்டா, செப்.9- இஸ்ரோ எனப்படும் இந் திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இதுவரை 62 செயற்கை கோள்களையும், 37 ராக்கெட்டுகளை யும் விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ள து. இஸ்ரோ நிறுவனத்தின் 100-வது திட்டமாக பி. எஸ்.எல்.வி.-சி21 ராக்கெட் வடிவமைக்கப்பட்டது. பி.எஸ்.எல்.வி.-சி21 ராக்கெட்டை விண்ணில் செலு த்தும் பணிக்கான கவுண்ட் டவுன் நேற்று முன்தி னம் காலை 6.51 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 51 மணி நேரம் கவுண் ட் டவுன் நேரமாகும்.
இந்த 51 மணி நேரத்தில் எரிபொருள் நிரப்புவது, கம்ப்யூட்டர் கருவிகளை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது.
இன்று காலை பி.எஸ்.எல்.வி. சி-21 ராக்கெட் விண்ணில் செலுத்த தயார் நிலைக்கு கொண்டு வரப்பட்டது. சரியாக 9.51 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-21 ராக்கெட்டை ஏவ திட்டமிட்டிருந்தது. ஆனால் 2 நிமிடம் தாமதமாக அந்த ராக்கெட் 9.53 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சத்தீஷ் தவான் விண்வெளி ஏவு தளத்தில் இருந்து தீபுகையை கக்கியபடி விண்ணில் பாய்ந்தது.
பி.எஸ்.எல்.வி. சி-21 ராக்கெட் சரியான பாதையில் செல்வதை அறிந்ததும் ஸ்ரீஹரிகோட்டாவில் திரண்டிருந்த அனைவரும் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இஸ்ரோ வரலாற்றில் இது சாதனை மைல் கல்லாக கருதப்படுகிறது. 100-வது ராக்கெட் விண்ணில் பாய்வதை ஸ்ரீஹரிகோட்டா தளத்தில் உள்ள சிறப்பு அறையில் இருந்தபடி பிரதமர் மன்மோகன்சிங், மத்திய மந்திரி நாராயணசாமி நேரில் பார்த்தனர்.
இதற்காக விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. இன்று விண்ணில் ஏவப்பட்ட 100-வது ராக்கெட்டில் இந்திய செயற்கைக் கோள் எதுவும் இல்லை.
பிரான்சு நாட்டுக்கு சொந்தமான 712 கிலோ எடையுள்ள ஸ்பாட்-6 என்ற செயற்கைக்கோளும், ஜப்பான் நாட்டின் 15 கிலோ எடையுள்ள பிராய் டெரஸ் என்ற செயற்கைக்கோளும் 100-வது ராக்கெட் மூலம் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது.
இந்த செயற்கை கோள்கள் பூமியில் இருந்து சுமார் 655 கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது.
இஸ்ரோநிறுவனம் இது வரை எடை குறைந்த செயற்கை கோள்களையே விண்ணில் செலுத்தி வந்தது. ஆனால் இன்று செலுத்தப்பட்டுள்ள பிரான்சு நாட்டின் ஸ்பாட்-6 செயற்கை கோள்தான் அதிகப்பட்சமான 712 கிலோ எடை கொண்டது. இதுவும் இஸ்ரோவின் சாதனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இதற்கு முன்பு 2007-ம் ஆண்டு ஏவப்பட்ட இத்தாலி நாட்டின் 350 கிலோ எடை கொண்ட ஏஜிலி செயற்கை கோளே அதிக எடை கொண்ட செயற்கை கோளாக இருந்தது. 100-வது ராக்கெட்டை விண்ணில் செலுத்தி சாதனை புரிந்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி யாளர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் பிரதமர் மன்மோகன்சிங் பாராட்டு தெரிவித்தார்.
இந்த திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து விஞ்ஞானிகள் ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.
இஸ்ரோ நிறுவனம் முதன் முதலாக 1975-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ந் தேதி ஆர்யபட்டா எனும் செயற்கைகோளை ரஷியா உதவியுடன் விண்ணில் செலுத்தியது. அதன் பிறகு ஆந்திர மாநில கடலோரத்தில் சென்னை அருகே உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சத்தீஸ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ராக்கெட்டுக்களை இந்திய விஞ்ஞானிகள் விண்ணில் செலுத்தி வருகிறார்கள்.
முதலில் இந்தியா தனது செயற்கை கோள்களை மட்டுமே இந்த தளத்தில் இருந்து விண்ணுக்கு அனுப்பி வந்தது. சமீப காலமாக வெளிநாட்டு செயற்கை கோள்களையும் இஸ்ரோ விண்ணில் ஏவி வருகிறது.
அந்த வகையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறார்கள். ஒரே சமயத்தில் 7 செயற்கை கோள்களை ஒரே ராக்கெட் டில் வைத்து விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக