தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.9.12

சிரியா தலைநகரில் 45 பேர் கொலை, அமைதிக்கு உதவ தயார் புட்டீன்


சிரியா தலைநகர் டமாஸ்கசை அண்டிய இரு நகரங்களில் 45 பே ர் படுகொலை செய்து வீசப்பட்டுள்ளார்கள்.டமாஸ்கஸ் பகுதியி ல் உள்ள ஸமால்கா நகரத்தில் 23 சடலங்கள் கிடந்தன இவை பெ ண்கள், பிள்ளைகளுடையவை.ஸமால்கா பகுதியே தலைநகரி ல் ஆஸாட் படைகளுக்கு எதிராக ஆர்பாட்டம் முனைப்பாக நடக் கும் பகுதியாகும்.மேலும் கற்றானா நகரப்பகுதியில் 22 உடலங்க ள் காணப்பட்டன, இந்த மரணங்களின் சூத்திரதாரிகள் ஆஸாட் ப டைகளே என்று கருதப்படுகிறது.45 மரணங்களையும் அங்கிருக் கும் மனித உரிமைகள் கழகம் உறுதி செய்திருந்தாலும், உடலங் கள் இன்னமும் அடையாளம்
காணப்படவில்லை.
மறுபுறம் சிரியாவில் ஓர் ஆட்சி மாற்றம் அவசியம் என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாக ரஸ்ய அதிபர் முதற்தடவையாக அறிவித்துள்ளார்.
ஐ.நா – அமெரிக்கா கூறுவதைப் போல இந்த பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர முட்டுக்கட்டையாக இருப்பது ரஸ்யா அல்ல என்றும் அவர் வழமைபோல நிராகரித்தார்.
மேலும் சிரியாவில் ஆட்சி மாற வேண்டியது அவசியம் என்றாலும் அது இரத்தப் புரட்சி மூலம் மாறவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாதென்றார்.
அமைதி வழியில் ஓர் ஆட்சி மாற்றம் நடக்க தாம் உதவத்தயார் என்று கூறியுள்ளார்.
இதனுடைய கருத்து ஆஸாட்டையும் அவர் படைகளையும் சர்வதேச போர்க்குற்றத்தில் இருந்து காப்பதாகும்.
இதேவேளை ஐரோப்பிய ஒன்றியம் சிரியாவில் பாதிக்கப்படும் அகதிகளுக்காக 50 மில்லியன் யூரோக்களை ஒதுக்கியுள்ளது, அதைத் தவிர தண்ணீர், வைத்தியம், வீட்டுப்பாவனைப் பொருட்களுக்காக 100 மில்லியன் யூரோவை வழங்கியுள்ளது.
உலகளாவியரீதியில் சிரிய அகதிகளுக்கு அரைப்பங்கு உதவி வழங்கிவருவது ஐரோப்பிய ஒன்றியமே என்பது கவனிக்கத்தக்கது.

0 கருத்துகள்: