அகமதாபாத்: — குஜராத்தில் 2002 ஆம் ஆண்டில் நட ந்த கலவரத்துக்குப் பிறகு , முஸ்லிம்களைப் போலி என்கெளண்டர் நடத்திக் கொல்லும்படி போலீஸ்உய ரதிகாரிகள் தமது கீழ் அலுவலர்களுக்கு உத்தரவிட் டிருந்தனர் என முன்னாள் குஜராத் டி ஜி பி ஸ்ரீ குமார் கூறியுள்ளார். ஓய்வு பெற்ற நீதிபதி ஹெச் எஸ் பேடி தலைமையில் அமைக்கப் பட்டுள்ள சிறப்புப் புலனா ய்வுக் குழுவின் முன் தாம் சமர்ப்பித்த 16 பக்க அறிக் கையில் ஸ்ரீ
குமார் இவ்வாறு கூறியுள்ளார். 16 போலி என்கெளண்டர்கள் பற்றி விசாரிப்பதற்காக உச்ச நீதி மன்றத்தால் அமைக்கப் பட்ட
சிறப்புப் புலனாய்வுக் குழு கடந்த வாரம்தான் தன்னுடைய விசாரணையைத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ குமார் தம் அறிக்கையில் தாம் உளவுத்துறை ஏ டி ஜி பி யாகப் பணிபுரிந்த காலத்தில், டி ஜி பி முதல் முதல்வர் வரையிலான உயர் அதிகாரிகள் பல தடவை ரகசியக் கூட்டங்கள் நடத்தினர் என்றும் அந்த கூட்டங்களின் நடைமுறைக் குறிப்பேடுகள் எதுவும் எழுதப்படவோ ஆவணப்படுத்தப்படவோ இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
2002 ஆம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் "தீவிரவாதிகள்" எனும் பேரில் முஸ்லிம்களை அழிக்கும்படி தமக்கு உத்தரவு தரப்பட்டதாகவும் ஆனால் அதை நிறைவேற்றவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக