தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.4.12

போலி பாஸ்போர்ட் மூலம் துபாய் செல்ல முயன்றவர் சென்னையில் கைது

போலி பாஸ்போர்ட் மூலம் துபாய் செல்ல முயன்ற இளை ஞரை சென்னை விமான நிலைய போலீசார் கைது செய்த னர்.கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் பாஸ் கர்(30). இவருக்கு, சமீபத்தில் துபாயில் வேலை கிடைத்தது. ஆனால், அங்கு செல்ல பாஸ்கருக்கு முறையான பாஸ் போர்ட் இல்லை. இதனால், திருவனந்தபுரத்தில் உள்ள டிரா வல் ஏஜென்ட் ஒருவரை அணுகி, 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தார்.பாஸ்கரிடம் இருந்து பணத்
தை பெற்றுக் கொ ண்ட அந்த ஏஜென்ட், வேறு ஒருவர் பாஸ்போர்ட்டில் பாஸ்கரின் புகைப்படத் தை ஒட்டி, போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்துள்ளார்.

அதை உண்மை என நம்பி, துபாய் புறப்பட்ட எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் செய்ய, சென்னை விமான நிலையத்திற்கு சென்றார் பாஸ்கர். ஆனால், குடியுரிமை அதிகாரிகள், அவரின் பாஸ்போர்ட் போலியானது என்று கண்டறிந்ததால்,விமான நிலைய போலீசாரிடம் பாஸ்கரை ஒப்படைத்தனர்.இதனைடுத்து, போலி பாஸ்போர்ட் விவகார்தில் பாஸ்கரை கைது செய்த விமான நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்துகள்: