ரஷ்ய பயணிகள் விமானம், சைபீரியாவில் விபத்தி ல் சிக்கி நொறுங்கியதில் 16 பயணிகள் பரிதாபமாக இறந்தனர். 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடக்கிறது. ரஷ்யாவின் ஏடிஆர்-72 என்ற பயணிகள் விமானம் ஒன்று இன்று காலை சைபீரி யாவின் டியுமென் நகர் மீது பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. உ டனடியாக சைபீரிய எமர்ஜென்சி அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்பு
படையினர் விப த்து பகுதிக்கு அனுப்பப்பட்டனர். அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 12 பேரை மீட்புப் படையினர் மீட்டனர்.
படையினர் விப த்து பகுதிக்கு அனுப்பப்பட்டனர். அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 12 பேரை மீட்புப் படையினர் மீட்டனர்.
இதுகுறித்து அமைச்சக செய்தித் தொடர்பாளர் இரினா ஆண்டிரிநோவா கூறுகையில், விபத்து பகுதியில் இதுவரை 16 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. மீட்புப் பணி தொடர்ந்து நடக்கிறது. எங்களுக்கு கிடைத்த முதல் தகவலின்படி விமானத்தில் 39 பயணிகள் இருந்தது தெரிய வந்துள்ளது. எனவே, விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக