தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.4.12

ஈரானுடன் அமெரிக்கா, சீனா பேச்சுவார்த்தை


ஈரானின் அணு சக்தி விவகாரம் தொடர்பாக வருகிற 13, 14ம் திகதிகளில் பேச்சுவார்த்தை நடைபெறும் என அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.சவுதி அரேபியாவில் நடைபெற்ற பெர்சிய வளைகுடா அரபு நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான மாநாட்டுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹிலாரி,
அணுசக்தி விவகாரத்தில் சர்வதேச நாடுகள் தெரிவித்து வரும் கருத்துகளில் ஈரானின் அக்கறை
பற்றி அறிய துருக்கியின் இஸ்தான்புல்லில் இக்கூட்டம் நடத்தப்படுகிறது என்றார்.
ஈரானிடமிருந்து இந்தியா,சீனா உட்பட பல்வேறு நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா எச்சரிக்கை விடுத்த மறுநாள் ஹிலாரி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஈரான் தொடர்பான இப்பேச்சுவார்த்தைக்கு துருக்கி ஏற்பாடு செய்துள்ளது. இக்கூட்டத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷியா, சீனா, ஜேர்மனி, ஈரான் ஆகிய நாடுகள் கலந்து கொள்கின்றன என்று துருக்கி பிரதமர் ரேஸப் தெய்ப் யெர்தோகான் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணு சக்தி ஆய்வு மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அது முழுமையாக வளைகுடா பிரதேசத்தையே பாதிக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

0 கருத்துகள்: