இங்கிலாந்தில் கடந்த ஆண்டில் மட்டும் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 400 சிறுமிகளுக்கு கட்டாயத் திருமணம் நடந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.இந்தியாவில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இன்னமும் குழந்தை திருமணம் நடக்கிறது. தமிழகத்தில் தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் பள்ளி சிறுமிகளுக்கு திருமணம் செய்து
வைத்து விடுகின்றனர். அவ்வப்போது வருவாய் துறை அதிகாரிகள் இதை கண்டுபிடித்து தடுத்து வருகின்றனர்.இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள இந்தியர்கள் கூட தங்கள் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து வைப்பது தெரிய வந்துள்ளது. இதை தடுக்க அந்நாட்டு அரசு ஒரு புதிய சட்டமே கொண்டு வரவுள்ளது. இது பற்றி, லண்டனில் வெளியாகும் டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்தின் கீழ் குழந்தை திருமண தடுப்பு பிரிவு செயல்படுகிறது. இந்த பிரிவு வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி, கடந்த 2011ல் மட்டும் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகளை சேர்ந்த 400 சிறுமிகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் கட்டாயத் திருமணம் செய்து வைத்துள்ளனர். அந்த சிறுமிகளில் 5 வயது குழந்தையும் உண்டு.

கடந்த 2008ம் ஆண்டில் 1,618 குழந்தை திருமண தடுப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 2010ல் இது 1,735 ஆக அதிகரித்தது. பின்னர், 2011ல் 1,500 ஆக குறைந்துள்ளது. பெரும்பாலான பெற்றோர்கள், பள்ளி விடுமுறையின் போது, குழந்தைகளை சொந்த நாட்டுக்கு அழைத்து சென்று அங்கு அவர்களுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.
இதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தாலும், முழு அளவில் தடுக்க முடியவில்லை. எனவே, குழந்தை திருமணம் செய்து வைக்கும் பெற்றோருக்கு 2 ஆண்டு வரை சிறை தண்டனை அளிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர பரிசீலித்து வருகிறோம் என்று அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக