ஜமாத் உத் தாவா இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் ஹாபிஸ் முஹம்மத் சயீதுக்கு எதிராக உறுதியான ஆதாரம் இல்லை.அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது, என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் வெளிநாட்டு அலுவலக செய்தி தொடர்பாளர் அப்துல் பஷீத் கூறும் போது, பேராசிரியர் ஹாபிஸ் முஹம்மத் சயீத் மற்றும் அவரது துணைத்தலைவர், அப்துல் ரஹ்மான் மக்கி, ஆகியோருக்கு எதிராக சான்றுகள் அல்லது தகவல் தருபவர்களுக்கு, ஒரு கோடி டாலர் பரிசு வழங்கப்படும், என அமெரிக்கா கூறி உள்ளது, விசித்திரமானது. இப்படி ஒரு அறிவிப்பு வெளியிடுவதற்கு முன், அமெரிக்கா தகுந்த ஆதாரங்களை வைத்திருந்திருக்க வேண்டும். ஆனால் அமெரிக்கா ஆதாரம் இருப்பதாக எதுவும் தெரிவிக்கவில்லை. மேலும் நாங்கள், பேராசிரியர் ஹாபிஸ் முஹம்மத் சயீத் மற்றும் அவரது துணைத்தலைவர் அப்துல் ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக, எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை, என எங்கள் நிலைபாட்டை கூறி விட்டோம், என தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக