புதுடெல்லி:அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான டெண்டரை விட கடற்படை திட்டமிட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய டெண்டராக இருக்கும் என கூறப்படுகிறது.கடற்படையில் தற்போது ‘சீகிங்’ ரக ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடற்படை பணியில் அதிநவீன மல்டிரோல் ஹெலிகாப்டர்கள் அதிகளவில் தேவைப்படுகின்றன. 16 ஹெலிகாப்டர்கள்
வாங்குவதற்கு ஏற்கனவே டெண்டர் விடப்பட்டுள்ளது.
வாங்குவதற்கு ஏற்கனவே டெண்டர் விடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளின் தயாரிப்பான ‘என்.எச்,90′ மற்றும் அமெரிக்காவின் ‘சிகோ ர்ஷிஎஸ், 70 பிராவோ’ ஹெலிகாப்டர் நிறுவனங்கள் இந்த ஆர்டரை பெற போட்டியிடுகின்றன.
இந்நிலையில், 20 ஆயிரம் கோடி மதிப்பில் 75 க்கும் அதிகமான மல்டி ரோல் ஹெலிகாப்டர்களை வாங்க டெண்டர்விட கடற்படை திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக சர்வதேச ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து கடற்படை விரிவான அறிக்கை கேட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர்கள், நீர்மூழ்கி கப்பல்களையும் தாக்கும் வல்லமை படைத்தது.
இது குறித்து அமெரிக்காவின் போர்க்கப்பல் மற்றும் விமான தயாரிப்பு நிறுவனமான லாக்கீட் மார்ட்டின் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜார்ஜ் பார்டன் கூறுகையில், “75 க்கும் அதிகமான மல்டிரோல் ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய கடற்படை திட்டமிட்டிருப்பது உலகின் மிகப் பெரிய டெண்டராக இருக்கும்.
அமெரிக்க கடற்படையில் 350க் கும் மேற்பட்ட எம்.எச்.60 ரக மல்டி ரோல் ஹெலிகாப்டர்கள் உள்ளன” என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக