தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.4.12

சிக்கன நடவடிக்கை: 2000 பணியாட்களை நீக்க யாஹூ முடிவு


யாஹூ நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்றுள்ள ஸ்காட் தாம்ஸன், ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.கடந்த இரு ஆண்டுகளில் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள், கூகுள், பேஸ்புக் போட்டிகளைச் சமாளிக்கத் தவறியதால் பல மில்லியன் டொலர்கள் நஷ்டத்தைச் யாஹூக்கு ஏற்படுத்தியுள்ளதாக ஸ்காட் தெரிவித்துள்ளார்.எனவே பணியாட்களை குறைப்பதன்
மூலம் சிக்கன நடவடிக்கைகளை ஸ்காட் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.இதற்கு முன்பு, கடந்த 2011ல் யாஹூவில் 14,000 பணி
யாளர்கள் இருந்தனர். இப்போது இவர்களில் 2000 பேரை நீக்குவதன் மூலம் ஆண்டுக்கு 375 மில்லியன் டொலர்களை சேமிக்கவும், வரிகள் மூலம் 45 மில்லியன் டொலர்கள் வரை சேமிக்கவும் யாஹூ முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு 14,000 பணியாளர்களுடன் இருந்த யாஹூ 4.98 பில்லியன் டொலர்களைச் சம்பாதித்தது.
ஆனால் 3,200 பணியாளர்களை மட்டுமே கொண்ட பேஸ்புக், 3.71 பில்லியன் டொலர்களை சம்பாதித்தது. இத்தனை குறைந்த பணியாளர்களுடன் அந்த நிறுவனம் அதிக வருமானம் ஈட்டியதே யாஹூ தலைமை நிர்வாகி ஸ்காட்டை பணியாளர் குறைப்புக்குத் தூண்டியதாகச் சொல்லப்படுகிறது.

0 கருத்துகள்: