தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.4.12

சுங்க வரியை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகத்தில் 7 நாட்களுக்கு நகைக்கடைகள் கடையடைப்பு.


தங்கத்துக்கு மத்திய அரசு புதிதாக விதித்துள்ள கலால் வரி, சுங்க வரியை ரத்து செய்ய வலியுறுத்தி நகைக்கடை வியாபாரிகள் தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் 7 நாட்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு கடந்த மாதம் 17ம் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில், தங்கத்துக்கு புதிய வரியை விதித்தது.இதை கண்டித்து நாடு முழுவதும் உள்ள நகை கடை வியாபாரிகள் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் நகை கடைகளை அடைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
ஆனாலும் மத்திய அரசு வரி விதிப்பை திரும்ப பெறவில்லை. இந்நிலையில், வரிகளை ரத்து செய்யக் கோரி நகைக்கடை வியாபாரிகள் இன்று முதல் தொடர்ந்து 7 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் கடைகளை அடைத்து மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்க உள்ளனர். சென்னையில் தி.நகர், பாரிமுனையில் ஏராளமான நகை கடைகள் உள்ளன. இந்த கடைகள் அனைத்தும் இன்று மூடப்பட்டிருந்தது. 

இதனால் திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிக்காக நகை வாங்க எண்ணியிருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். முதல்வரை சந்திக்க முடிவு சென்னை தங்க நகைக்கடை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறும்போது, சென்னையில் மட்டும் 40 ஆயிரம் தொழிலாளர்கள் இந்த ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் நகைக் கடைகள் அடைக்கப்பட்டதன் மூலம் மத்திய அரசுக்கு தினமும் ரூ.1000 கோடிக்கு அதிகமாக வருவாய் இழப்பு ஏற்படும். தமிழக அரசுக்கும் வாட் வரி மூலம் வருவாய் கிடைப்பதால் பல கோடிக்கு இழப்பு ஏற்படும். முதல்வர் ஜெயலலிதாவை, நகை வியாபாரிகள் சங்கம் மூலம் சந்தித்து கோரிக்கை வைக்க திட்டமிட்டுள்ளோம். முதல்வரை சந்திக்கும்போது, வரியை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்துமாறு கூறுவோம் என்றார்.

0 கருத்துகள்: