தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.4.12

ஏப்ரல் 10 ம் திகதி சிரியாவில் யுத்த நிறுத்தம் – அதற்குள் அவசரக் கொலைகள்


எதிர்வரும் ஏப்ரல் 10ம் திகதியில் இருந்து பூரண யுத்த நிறு த்தத்திற்கு சிரிய அதிபர் பஸாட் அல் ஆஸாட் தயார் என் று கொபி அனான் அறிவித்துள்ளார். நேற்று திங்கள் நியூ யோர்க்கில் ஐ.நா பாதுகாப்பு சபையில் வைத்து பூட்டிய அ றைக்குள் இந்த விளக்கத்தை வழங்கினார். அதேவேளை வெளியில் அம்பலப்படுத்த முடியாத சில இரகசியங்க ளை அவர் எடுத்துரைத்தார். அதே வேகத்தில் அரபுலீக் கை யும் சந்தித்து இந்த விவகாரத்தை தெரிவித்தார்.ஏப்ர ல் 10ம் திகதி முதல் கட்டமாக
48 மணி நேரம் நூற்றுக்கு நூறுவீத யுத்த நிறுத்த த்தை இரு தரப்பும் கடைப்பிடிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து மக்கள் வாழும் இடங்களுக்குள் நுழைந்துள்ள கனரக வாகனங்கள் யாவும் திருப்பி எடுக்கப்பட வேண்டும். அடுத்த கட்டமாக அனைத்து இராணுவமும் முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டும். பொது மக்கள் வாழும் நாடாக சகல இடங்களும் மாற்றப்பட வேண்டும்.
இவை உறுதி செய்யப்பட்டதும், கொபி அனான் முன்மொழிந்துள்ள ஆறு அம்சத்திட்டத்தை படிப்படியாக அமல் செய்ய வேண்டும். இதை கண்காணிக்கவும், சர்வதேச சமுதாயத்திற்கு தகவல்களை வழங்கவும் கொபி அனான் தலைமையிலான குழுவினர் பணியாற்றுவார்கள். ஆஸாட் றெஜீமின் அத்தனை நகர்வுகளும் அவதானிக்கப்பட்டு மாற்றங்கள் செய்யப்படும். போர் இல்லாமலே இலக்கை எட்ட முயல்வார்கள், அதில் ஆஸாட் குழப்பத்தை ஏற்படுத்தினால் நிலமை லிபியா போல மாற்றமடையும் என்பது தெரிந்ததே. ஒரு தொகுதி அரபு நாடுகள் சிரிய போராளிகளுக்கு 100 மில்லியன் குறோணர்கள் வழங்குவதற்கு உடன்பட்டுவிட்டன.
கொபி அனான் முன்னெடுத்துள்ள அமைதிப் பணியை ரஸ்யா, சீனா, அரபுலீக், ஐ.நா உட்பட அனைத்துத்தரப்பும் வரவேற்றுள்ளன. சிரியாவில் ஏற்பட்ட முன்மாதிரி இனி பர்மா, சிறீலங்கா போன்ற நாடுகளிலும் அமலுக்கு வரும். அதேவேளை கொடுத்த காலக்கெடு முடிவடைய முன்னர் ஆஸாட்டின் படைகள் வேகமான படுகொலைகளை அரங்கேற்றியபடி உள்ளன. வடக்கு புற நகரான இடிலிப்பில் மோசமான தாக்குதல்களை அரங்கேற்றியுள்ளனர். நேற்று கொபி அனான் நியூயோர்க்கில் பேசிக்கொண்டிருக்க 14 வீடுகளை கொழுத்தி, அங்கிருந்த மக்களை கைது செய்துள்ளார்கள் என்று போராளிகள் கூறினார்கள்.

0 கருத்துகள்: