தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.4.12

மமத் விலங்கின குட்டியொன்றின் சிதையாத தோல்பாகங்கள் பத்திரமாக மீட்பு


இற்றைக்கு 3500 வருடங்களுக்கு முன்னர் முற்றாக அழிந்து போனதாக நம்பப்படும் மமத் விலங்கினத்தி ன், குட்டி மமத் ஒன்ற்றின் சிதையாத தோல் பாகத்தி னை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடி த்துள்ளனர்.கடும் குளிர் மற்றும் பனியில் அகப்பட்டு கொண்டதால் இக்குட்டி மமத்தின் தோல் பாகங்கள் எந்தவொரு சிதைவுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டுள் ளன. பொதுவாக சிங்கங்களால்
வேட்டையாடப்படுகின்ற போதும், இந்த மமத் விலங்கு மனிதனால் வேட்டையாடப்பட்டிருக்கலாம், அல்லது நஞ்சு கொடுக் கப்பட்டு கொல்லபப்ட்டிருக்கலாம் என இந்த யானையின் தோல் பாகங்களின் காயங்களிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் முடிவெடுத்துள்ளனர். மேலும் 10,000 வருடங்களுக்கு முன்னதாக இந்த மமத் வாழ்ந்திருக்கலாம் எனவும் அவர்கள் கணிப்பிட்டுள்ளனர்.

இதன் தோல் பாகங்கள் மற்றும் உரோமங்கள் குளிரை தாங்கும் வகையில் தடித்த கம்பளி போன்றிருக்கிறது. மமத் விலங்கினம் தொடர்பான வருங்கால ஆராய்ச்சிகளுக்கு இக்கண்டுபிடிப்பு பெரிதும் உதவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உறையவைக்கும் கடுங்குளிர் இந்த மமத் விலங்கின் தோல்களை சில ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு நேர்த்தியாக பாதுகாத்து வந்துள்ளது ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்த மமத் விலங்கு சிபேரியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கி யூகா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மமத், பிறந்து இரண்டரை வருடங்களில் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான விலங்கினங்களின் உயிரற்ற உடலங்கள் இயற்கையாகவே பதபப்டுத்தப்பட்டு பலவருடங்களின் பின்னர் மீட்கப்படுவதென்பது மிக அரிதான நிகழ்வென்பதால் இக்குட்டி மமத்தின் புகைப்படம் மிக பிரபல்யமாகி வருகிறது.


இவ்விலங்கினம் குளிர் பகுதியில் வாழ்ந்திருந்ததால் The Wooly Mammoth (Mammuthus primigenius) 'கம்பளி போன்ற தடித்த தோலுரு கொண்ட மமத்' என அழைக்கப்படுகிறது. இவற்றின் வெளித்தோலுரு 10 செ.மீ திடத்தன்மை வாய்ந்ததாக காணப்படுகிறது. அவற்றின் காதுகள் மிகச்சிறியனவாகவும், வால் மிக குறுகியதாகவும் காணப்படுவதுடன், தடிமமான உரோமங்கள் வெப்ப இழப்பை தடுக்க உதவுகின்றன.

அவற்றின் கொம்புகள் 5 மீற்றல் நீளத்திற்கு இருந்துள்ளன. பனியை ஆழமாக தோண்டுவதற்கும், எதிரிகளுடன் சண்டையிடுவதற்கும் அவை பயன்பட்டுள்ளன

0 கருத்துகள்: