தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.3.12

பத்திரிக்கையாளர் கைது : இந்தியாவில் நடப்பது UPA ஆட்சியா? அல்லது மொசாத் - CIA ஆட்சியா? - டெல்லி இமாம்


பிரபல பத்திரிக்கையாளர், முஹம்மது அஹ்மது காஜிமி' மீது, தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு, கைது செய்யப்பட்டதை கண்டித்து, தலை நகரம் டெல்லியில் பல தரப்பிலிருந்தும் ஆதரவுக்குரல்கள் ஓங்கி ஒலிக்க துவங்கி விட்டது.Press club of india,  Delhi union of journalists போன்ற அமைப்புக்கள், பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டவர்களை தொடர்பு கொண்டு,  பத்திரிக்கையாளர் முஹம்மது அஹ்மது காஜிமி' யின் விடுதலைக்காக குரல் கொடுத்த வண்ணம் உள்ளனர். மேலும்
இவர்களுக்கு ஆதரவாக சட்ட மன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் களத்தில் உள்ளனர். 
டெல்லி ஜாமியா மசூதி இமாம் புகாரி அவர்களும்,  காஜிமி'யின் வீட்டிற்கு சென்று, அவரது குடும்பத்திற்கு, தாம் ஆதரவாக இருப்பேன் என்றும் உறுதி அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இமாம் புகாரி, இந்தியாவில் நடப்பது UPA கூட்டணி ஆட்சியா? அல்லது இஸ்ரேலின் மொசாத் மற்று அமெரிக்காவின் CIA ஆட்சியா? என்றும் காட்டமாக கேட்டார். 
முஸ்லிம்களை கொடுமை படுத்தும் உங்களின் தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள், அல்லது 2014 தேர்தலில், துடைத்தெறியப்பட்டு, காணாமல் பொய் விடுவீர்கள், என்றும் காங்கிரசை எச்சரித்தார், இமாம் புகாரி. இதற்கிடையில், டெல்லியில் மட்டுமில்லாமல் உத்தர பிரதேசத்தின் பெரும் பாலான இடங்களிலும், முஸ்லிம் பொது மக்களும், ஜமாஅத் தலைவர்களும், பல்வேறு அமைப்புக்களும், பத்திரிக்கையாளர் முஹம்மது அஹ்மது காஜிமி'யை, விடுதலை செய்யக்கோரி வீதியில் இறங்கி போராட்ட களத்தில் ஈடுபட்டுள்ளனர்.

0 கருத்துகள்: