தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.3.12

60 ஆண்டுக்கு பிறகு சீனாவில் முதல் முறையாக மனித உரிமை சட்ட திருத்தம்


சீனாவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு, முதல் முறையாக மனித உரிமை சட்டத்தில் சில திருத்தங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சீன நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில் இப்போதைய சமூக மாற்றங்களுக்கு ஏற்ப சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்று தேசிய மக்கள் காங்கிரசை சேர்ந்த பிரதிநிதிகள் வலியுறுத்தி வருகின்றனர்.குறிப்பாக சீனாவில் சிறுபான்மையினர்

மற்றும் சீன நாட்டை சேராதவர்களுக்கு எதிரான சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வரவேண்டும். குறிப்பாக போலீசாருக்கு அளிக்கப்பட்டுள்ள சட்டத்தை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
சீனாவில் ஒருவரை கைது செய்தால், அதுபற்றி அவரது குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. அவரை ரகசிய இடத்தில் வைத்து சித்ரவதை செய்து உண்மையை பெறுகின்றனர். இதுபோன்ற மனித உரிமை மீறல்களை தடுக்க வேண்டும் என்று குரல் எழுப்பினர்.
இதையடுத்து, சீன சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர நாடாளுமன்றத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கைது நடவடிக்கை குறித்து சம்பந்தப்பட்டவரின் குடும்பத்துக்கு போலீசார் தகவல் தெரிவிக்க வேண்டும், குற்றவாளியை சித்ரவதை செய்ய கூடாது என்ற அம்சங்கள் சட்டத் திருத்தத்தில் இடம்பெற உள்ளன. எனினும், தேசிய பாதுகாப்பு விஷயத்தில் இவற்றை பின்பற்ற தேவையில்லை என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: