தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.3.12

ஓரினச் சேர்க்கையை திருமணம் என்ற வகையில் அர்த்தப்படுத்த கூடாது. வாடிகான் போப்


அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில், ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு கடந்த வாரம் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஏற்கனவே 7 மாகாணங்களில் ஓரினச் சேர்க்கை சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. இப்போது 8வதாக மேரிலேண்டும் சேர்ந்துள்ளது.இந்நிலையில் மேரிலேண்ட் மாகாணத்தை சேர்ந்த பிஷப்கள், போப் பெனடிக்ட்டை நேற்று சந்தித்தனர். அவர்கள் மத்தியில் போப் பேசியதாவது:திருமணம் என்பதற்கு காலம் காலமாக அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தை

மாற்றக் கூடாது. ஓரினச் சேர்க்கையை திருமணம் என்ற வகையில் அர்த்தப்படுத்த கூடாது. திருமணம், குடும்பம் என்ற அமைப்பை மேம்படுத்த வேண்டும். அதன்  புனிதத்தை கெடுக்கும் எந்த முயற்சியையும் தடுத்து நிறுத்த வேண்டும்.
சமீப காலமாக பாரம்பரிய திருமண முறை, குடும்பம் என்ற அமைப்புக்கு எதிரான சில நடவடிக்கைகள் சமூகத்தில் பிரச்னையை ஏற்படுத்தி வருகின்றன. எனினும், திருமணம், குடும்பம் என்ற அமைப்புக்கு கத்தோலிக்க சர்ச்கள், கல்வி நிறுவனங்கள், பிஷப்கள் முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருவது பாராட்டத்தக்கது.
குறிப்பாக விவாகரத்து, டீன் ஏஜ்களில் தாய்மை அடைதல், கருக்கலைப்பு போன்ற பிரச்னைகளை தடுக்க கத்தோலிக்க சர்ச்கள் எடுத்து வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் பாராட்டத்தக்கது. இவ்வாறு போப் பெனடிக்ட் பேசினார்.

0 கருத்துகள்: