தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.3.12

டெல்லி கார்பொரேஷன் தேர்தல் : போலி என்கவுண்டருக்கு பதிலடி கிடைக்குமா?


உறுப்பினர்களை கொண்ட, Municipal Corporation of Delhi (M.C.D) டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான மனு தாக்கல் இன்று  (19/03/12) துவங்கவிருக்கிறது. உ.பி,யை தொடர்ந்து நடக்கும், டெல்லி மாநகராட்சி தேர்தலில் "பாட்லா ஹவுஸ்" போலி என்கவுண்டருக்கு, பதிலடி கொடுக்க தயாராகி விட்டனர், பாதிக்கப்பட்ட மக்கள். காங்கிரஸ் கட்சியின் கையாலாகத்தனத்தால், ஒரு பக்கம் "காவி பயங்கரவாதம்" என்று
பாராளுமன்றத்திலே சொல்ல முடிந்த உள்துறை அமைச்சரால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. 

மரண வியாபாரி மோடி என்று பேச முடிந்த சோனியா காந்தியால், மோடியை தண்டிக்க முடியவில்லை. காவல் துறையிலும், இன்ன பிற அரசுத்துறைகளிலும், சங்கபரிவார பாசிஸ்ட்டுகள் நுழைந்து விட்டார்கள், என்று பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும், திக் விஜய் சிங் போன்றவர்களால், "போலி என்கவுண்டர்கள்" மூலம் முஸ்லிம்கள் கொல்லப்படுவதை, தடுக்க முடியவில்லை என்பதோடு, முறையான விசாரணைக்கும் உத்தரவிடவில்லை. இது போன்ற இரட்டை நிலை கொண்ட காங்கிரசை, தற்போது, முஸ்லிம்கள் புரிந்து கொண்டு, உ.பி, தேர்தலில் காங்கிரசை புறக்கணித்தனர். 

முஸ்லிம்களின், இந்த அரசியல் விழிப்புணர்வின் வெளிப்பாடு தான், தோற்க நேர்ந்த மாயாவதி, தான் முஸ்லிம்களால் தான் தோற்கடிக்கப்பட்டேன் என்று சொன்னார். வெற்றி பெற்ற முலாயம் சிங்கும், முன்னைவிட பன்மடங்கு அதிகமாக முஸ்லிம் நலன்களுக்காக செயல்படுவேன் என்றார். ஆனால், டெல்லி "பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர்" விஷயத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ஒரு நேர்மையான விசாரணைக்கு உத்தரவிட தயக்கம் காட்டி வருவதோடு, அப்படி விசாரணை கமிஷன் அமைத்தால், அது போலீஸ் நலனுக்கு எதிராகி விடும், என்றும் வக்காலத்து வாங்கி வருகிறார். இது போன்ற, அநியாயங்களுக்கு,  தேர்தல்கள் மூலம் தான் பதிலடி கொடுக்க முடியும். 

சமீப காலமாக, டெல்லியில் பல முஸ்லிம் வாலிபர்களையும் பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில், போலியாக குற்றம் சுமத்தி, கைது செய்து வந்தது டெல்லி போலீஸ். எனவே, இது போன்ற போலீசின் தவறான நடவடிக்கைகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம்,  இம்முறை முஸ்லிம்கள் டெல்லி கார்பொரேஷன் தேர்தலில் கணிசமாக போட்டியிட்டு, மக்கள் மன்றத்தின் அங்கீகாரம் பெற முடிவு செய்துள்ளனர். 

குறிப்பாக குண்டு வெடிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பலரையும், களத்தில் இறக்கவுள்ளனர். அதற்க்கான சட்ட அனுமதிகளும் பெறப்பட்டு வருகிறது. குறிப்பாக, சிறையிலிருக்கும்,  டெல்லி ஒக்லா நகரை சேர்ந்த, ஜியாவுர் ரகுமான் என்பவர் அதற்க்கான அனுமதியும் பெற்று விட்டார். (உள்படம்:  ஜியாவுர் ரகுமான் பெற்றோர் அப்துர் ரஹ்மான், சகீனா பேகம் மற்றும் சமூக சேவகர் அமானதுல்லாஹ் கான்)   சிறையிலிருக்கும் ஜியாவுர் ரகுமான், டெல்லி மாநகராட்சி, 205வது வார்டில் போட்டியிட்டு, தனக்கிழைக்கப்பட்ட அநீதிகளுக்கு, மக்களிடம் நியாயம் கேட்கவுள்ளார். தவிர இது காலம் வரை, தேர்தல் களத்தை விட்டு ஒதுங்கியே இருந்த, பல முஸ்லிம்களும் தேர்தல் களத்தை சந்திக்க உள்ளனர். 

0 கருத்துகள்: