பாகிஸ்தான் பார்லிமென்ட் இன்று கூடுகிறது. இரு அவை கூட்டுக் கூட்டத்தில் அதிபர் ஆசிப் அலி சர்தாரி உரை நிகழ்த்துகிறார்.தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வந்தது. ஆனால், கடந்த ஆண்டு மே 2ம் தேதி எந்த தகவலும் தெரிவிக்காமல் இஸ்லாமாபாத் அருகில் உள்ள அபோதாபாத் நகரில் திடீர் தாக்குதல் நடத்தி அல் கய்தா தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க படையினர் சுட்டுக் கொன்றனர்.
தொடர்ந்து ஆளில்லா சிறிய ரக விமானம் டிரோன்கள் மூலம் திடீர் திடீரென அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதில் தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டாலும் அப்பாவி பொதுமக்கள், பாகிஸ்தான் வீரர்களும் பலியாயினர்.அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் அமெரிக்க படைகளை வெளியேற்ற உத்தரவிட்டது. இதனால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
பரபரப்பான சூழ்நிலையில் நாளை பாக். பார்லிமென்ட் கூட்டு கூட்டத்துக்கு, அதிபர் சர்தாரி உத்தரவிட்டுள்ளார். இதில் அவர் உரை நிகழ்த்துகிறார். அப்போது அமெரிக்க உறவு குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக