செஞ்சி திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பி ரண்டு போலீஸ் அலுவலகம் மற்றும் அனைத்து மக ளிர் போலீஸ் நிலையம் உள்ளன. இந்த பகுதியில் ப ஸ் நிறுத்தம் உள்ளதால் பஸ்சைவிட்டு இறங்கி வ ருபவர்கள் இந்த போலீஸ் அலுவலக காம்பவுண்டு க்கு முன்பே சிறுநீர் கழிக்கின்றனர்.இதைதடுக்க பல முறை எச்சரிக்கை பலகை
வைக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து சிலர் இங்கு சி றுநீர் கழித்து வந்தனர். இதனால் பொறுமை இழந்த போலீசார் கடைசியாக தற்போது புதிய எச்சரிக்கை விடுத்து போர்டு ஒன்று வைத்துள்ளனர். அதில் காவல்துறை அறிவிப்பு எச்சரிக்கை சுட்டேபுடுவேன் இங்கு சிறுநீர் கழிக்காதீர் என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.அதில் நிர்வாணமாக நிற்கும் ஒரு சிறுவன் கையில் துப்பாக்கி வைத்துக் கொண்டு உள்ளது போல் படம் வரையப்பட்டுள்ளது. இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக