சீனாவின் இராஜதந்திரம் மெல்ல மெல்ல மேற்காக நக ர்ந்து தென்னாசியாவில் இந்தியாவின் குரல்வளையை ஏறத்தாழ பிடித்துவிட்டது. மேற்கண்ட கருத்தை அமெ ரிக்கா முன் வைத்துள்ளது. முதலாவது இந்திய பார்ப்ப னிய இராஜதந்திரம் அடிப்படை துவேஷம் கொண்டது என்பதால் அது தனக்கு அயலில் உள்ள அத்தனை தென் னாசிய நாடுகளையும் ஆண்டான் அடிமை நிலையில் பார்த்து வந்தது. சுதந்திரத்திற்குப்
பிறகு தென்னாசியா வில் உள்ள அத்தனை நாடுகளின் இரகசியமான முதல் எதிரியாக இந்தியா
மாறியது. எல்லா நாடுகளும் இந்தியா நமது தொப்புள் கொடி உறவு, இந்தியாவை பகைத்து எதுவுமே செய்ய முடியாது என்று பேசியபடியே இரகசியமாக சீனாவுடன் கை கோர்த்துவிட்டன.பிறகு தென்னாசியா வில் உள்ள அத்தனை நாடுகளின் இரகசியமான முதல் எதிரியாக இந்தியா
இந்தியாவுக்கு ஆதரவாக இருந்த ஈழத் தமிழினம் தமது முதல் எதிரியாக இன்று இந்தியாவை கருதுவதை பல செய்திகளும் உணர்த்துகின்றன. உதாரணமாக சென்ற வாரம் வன்னி மக்கள் நாங்கள் இந்தியாவை நம்பவில்வை அமெரிக்காவையே நம்புகிறோம் என்று அமெரிக்க பிரதிநிதியிடம் தெட்டத் தெளிவாக தெரிவித்திருந்தனர். இந்த நிலைக்கு அவர்கள் வரக் காரணம் எது..? இந்தியாவின் கொள்கை வகுப்பாளரின் தோல்வியடைந்த இராஜதந்திரமே.
தன்னுடைய காலில் பட்ட புல்லை அரைத்து குடித்துவிட வேண்டுமென கொள்கை வகுத்தவன் இந்திய இராஜதந்திரி சாணாக்கியன். அவனுடைய கொள்கை தோல்வியடைந்துதான் இந்தியா மேலை நாடுகளுக்கு பல நூற்றாண்டுகள் அடிமையானது. சுதந்திரத்தின் பின்னாவது அந்தக் கொள்கையின் தோல்வியை இந்தியா மறு மதிப்பீடு செய்திருக்க வேண்டும், ஆனால் செய்யவில்லை. இன்று எல்லாவற்றையும் இழந்து நிற்கும் இந்தியா குறித்து அமெரிக்கா வெளியிட்ட கருத்துக்கள் மிக மோசமானவையாக உள்ளன.
விடுதலைப் புலிகளை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டுமென இந்தியா தம்மிடம் சொன்னதாக நோர்வே கடந்த டிசம்பர் தெட்டத் தெளிவாக அறிக்கை வெளியிட்டிருந்தது. விடுதலைப்புலிகள் மட்டுமா.. பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், சீக்கிம், சிறீலங்கா, வங்காளதேசம் என்று அத்தனை தென்னாசிய நாடுகளையும் இந்தியா இவ்வாறுதான் கருதியது. இதன் பரிசே இன்று சீனாவின் வெற்றியாக உள்ளது. இது குறித்து வெளியான செய்தி :
சீனாவின் நடவடிக்கைகள் குறித்து கவலை அடைந்துள்ள இந்தியா தனது திறனை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ரொனால்டு பர்கீஸ் தெரிவித்தார்.
இந்தியாவை சுற்றி வங்கதேசம், பாகிஸ்தான், மியான்மர், மாலத்தீவு, இலங்கை ஆகிய நாடுகளில் ஏற்கெனவே சீனா தனது ராணுவ நிலைகளை வலுப்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் கத்வாரில் துறைமுகத்தை சீரமைத்து அங்கே தமது படைகளை நிறுத்தியுள்ளது. மாலத்தீவில் அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல்தளத்தை அமைத்திருக்கிறது. இதனால் இந்தியாவின் கவலை மேலும் அதிகரித்துள்ளது.
பதிலடியாக 6 ஆயிரம் கிலோமீட்டர் பறந்துசென்று தாக்கக்கூடிய ஏவுகணையை வடிவமைத்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை பல்வேறு போர்ஆயுதங்களை சுமந்துசெல்லக்கூடிய திறன்வாய்ந்தது. இந்தியா அதை பரிசோதிக்க தீவிரமாக உள்ளது என செனட் குழுவினரிடம் ரொனால்டு பர்கீஸ் தகவல் அளித்துள்ளார். சமீபத்தில் அமெரிக்க தேசிய புலனாய்வு மையத்தின் இயக்குநர் கிளெப்பரும் இதே தகவலைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் அம்பந்தோட்டை துறைமுகத்தை சீரமைத்து வலுவாக நிலை கொண்டிருக்கிறது. வங்கதேசத்தின் சிட்டகாங்க், மியான்மரின் காக்கோஸ் தீவுகளிலும் தமது கடற்படையை நிலைநிறுத்தியிருக்கிறது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் மூளுமேயானால் எந்த சிரமுமின்றி இந்திய கடற்பரப்புக்குள் தமது படைகளை நிலை நிறுத்திக் கொள்ளும் திட்டத்தை நீண்டகாலமாகவே சீனா மேற்கொண்டு வருகிறது.
ஆனால் இந்தியாதான், இலங்கை வழியாக சீனா உள்ளே வர வலியப் போய் வாசல் கதவைத் திறந்து வைத்து விட்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக