கேரளாவில் ஆலப்புழை அருகே கடலில் மீன் பிடித் து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் வாலன்டைன் என்கிற ஜெலஸ்டின் (45), அஜீஸ் பிங்கி (25) ஆகிய 2 பேர் இத்தாலி எண்ணை கப்பலில் வந்தவர்களால் சு ட்டுக் கொல்லப்பட்டனர்.இதை தொடர்ந்து என்ட்ரி கா லெக்சி
என்ற இத்தாலி கப்பல் கொச்சி துறைமு கத்துக்கு கொண்டு
வரப்பட்டது. அந்த கப்பலில் கேப்டன் உள்பட 24 ஊழியர்கள் உள்ளனர். அவர்களிடம் கொச்சி போலீசார் விசாரணை நடத்தி கொலை வழக் கு பதிவு செய்துள்ளனர்.
என்ற இத்தாலி கப்பல் கொச்சி துறைமு கத்துக்கு கொண்டு
வரப்பட்டது. அந்த கப்பலில் கேப்டன் உள்பட 24 ஊழியர்கள் உள்ளனர். அவர்களிடம் கொச்சி போலீசார் விசாரணை நடத்தி கொலை வழக் கு பதிவு செய்துள்ளனர்.
அப்போது மீனவர்களை சுட்டுக் கொன்ற 6 பேரை கைது செய்ய முடிவு செய்துள்ளனர். ஆனால் அதை ஏற்க இத்தாலி கப்பல் கேப்டன் மறுத்துவிட்டார். இந்திய சட்டத்துக்கு உடன் பட முடியாது என தெரிவித்தார்.
அதை தொடர்ந்து இத்தாலி தூதர் ஜியாம்பலோ குடிலோ கொச்சி சென்று போலீஸ் அதிகாரிகளுடன் பேசினார். அவரும், இதே கருத்தை கூறினார். சர்வதேச கடல் எல்லையில் தான் துப்பாக்கி சூடு நடந்துள்ளது.
இந்திய எல்லை பகுதியில் அல்ல. எனவே கப்பலையும், ஊழியர்களையும் கைது செய்யும் அதிகாரம் இந்திய போலீஸ் துறைக்கு கிடையாது என தெரிவித்தார்.
இதற்கிடையே, கேரளா போலீஸ் அனுப்பிய நோட்டீஸ் இத்தாலி வெளியுறவு அமைச்சகத்துக்கு அனுப்பப் பட்டுள்ளது. எனவே அங்கிருந்து வெளியாகும் உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என இத்தாலி கப்பல் ஊழியர்கள் தரப்பு வக்கீல் வி.ஜே. மாத்யூஸ் கூறியுள்ளார். இதை தொடர்ந்து தூதரகங்களின் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக