பத்திரிகை ஊடகத்தினை அச்சுறுத்தினார் எனும் குற்ற ச்சாட்டில், ஜேர்மனிய ஜனாதிபதியான கிரிஸ்டியன் வு ல்ஃப் இன்று (வெள்ளிக்கிழமை) பதவி விலகினார்.தா ன் வாங்கிய வீட்டுக்கடன் பற்றிய விபரங்களை வெளி யிட்டதால், பிரபல பில்ட் (Bild) பத்திரிகையை வாய்ஸ் மெயில் மூலம் கிரிஸ்டியன் வுஃல்ப் மிரட்டியதாக இவ ர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.கடந்த 2008ம் ஆண் டில் பிரபல
தொழிலதிபர் ஒருவரின் மனைவியிடம், வுல்ஃப் வீட்டுக்கடனாக
ஐந்து லட்சம் யூரோ பெற்றிருந்தார். எனினும் அப் போது அவர் மாகாணசபை தலைவராகவே இருந்தார். கடந்த 2010ம் ஆண்டு ஊஃல் ஜேர்மனிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர், பிரபல பில்ட் பத்திரிகை இக்கடன் விபரங்களை முழுவதுமாக தனது பத்திரிகையில் வெளியிட்டது.தொழிலதிபர் ஒருவரின் மனைவியிடம், வுல்ஃப் வீட்டுக்கடனாக
இவ்வாறு வெளியிட்டால் பத்திரிகை மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக வுல்ஃப் வாய்ஸ் மெயில் மூலம் குறித்த பத்திரிகை ஆசிரியரை மிரட்டிய ஆதாரத்தையும் அவர்கள் வெளியிட்டனர். இதையடுத்து வுஃல்ப் ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கிறார் எனவும், ஜனாதிபதி என்பதற்குரிய தகுதி அவரிடமில்லை எனவும் தொடர்ந்து ஊடக எதிர்க்குரல்கள் பல எழுப்பப்பட்டு வந்தன.
உஃல் எழுதிய புத்தகம் ஒன்றை விளம்பரப்படுத்துவத்ற்காக கார்ஸ்ட்டன் மேக்ஸ்மேயர் எனும் பெரும் பணக்காரர் ஒருவர் 43,000 யூரோக்களை செலவழித்தார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
இச்சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, இன்று (வெள்ளிக்கிழமை) உல்ஃப் தனது ராஜினாமா முடிவை அறிவித்தார். நான் சில தவறுகளை செய்துள்ளேன். ஆனால் நான் நேர்மையானவன். பெரும்பான்மையோரின் நம்பிக்கையை பெற்றவர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களின் நம்பிக்கை உரிய நபர் தான் ஜேர்மனிய ஜனாதிபதி பதவிக்கு தேவை. இதனால் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். இதன் மூலம் புதிய ஜனாதிபதியை விரைவாக தேர்ந்தெடுக்க மனப்பூர்வமாக வழிவிடுகிறேன் என அவர் தெரிவித்தார். இதேவேளை ஜனாதிபதி பதவியிலிருந்து உல்ஃப் பதவி விலகியதற்கு ஜேர்மனிய அதிபர் ஏஞ்சலோ மார்க்கல் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக