தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.2.12

யுரேனியம் செறிவூட்டல் பணிகள்:ஈரான் நேரடி ஒளிபரப்பு

யுரேனியம் செறிவூட்டும் பணியில் தங்கள் நாடு அடை ந்துள்ள முன்னேற்றம் குறித்த காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பி, உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள் ளது ஈரான். அமெரிக்கா உள்ள உலக நாடுகளின் எதிர்ப் புகளுக்கிடையே தலைநகர் டெஹ்ரான் அருகில், போர் டோ பகுதியில், பூமிக்கடியில் மிக மிக பாதுகாப்பான மு றையில், அணுஆயுதங்கள் தயாரிக்க உதவும்
யுரேனிய ம் செறிவூட்டும்
பணியை ரகசியமான மலைப்பகுதியில், ஈரான் நடத்தி வந்தது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், யுரேனியம் செறிவூட்டும் பணியில் தங்கள் நாடு அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும், செறிவூட்டுதலுக்கு பயன்படும் யுரேனிய பிளேட்டுகளை பொருத்தும் காட்சிகளையும் ஈரான் நாட்டின் தேசிய தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இப்பணிகளை அந்நாட்டின் அதிபர் அகமதி நிஜாத் பார்வையிட்டார். அவருடன் ஈரான் அணுவிஞ்ஞானிகள் உடன் இருந்தனர். ஈரானின் இந்த செயல் உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தனிமைப்படுத்துங்கள்: அமெரிக்கா ஆவேசம்: ஈரான் யுரேனியம் செறிவூட்டும் பணியை வெளிப்படையாக ஆரம்பித்திருப்பது அமெரிக்காவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானை உலக நாடுகள் தனிமைப்படுத்த வேண்டும் என ஒபாமா நிர்வாகம் கூக்குரலிட்டு தெரிவித்துள்ளது.
பெட்ரோல் கட்: இதனிடையே மற்றொரு அதிர்ச்சியாக, 6 ஐரோப்பிய நாடுகளுக்கு பெட்ரோலிய சப்ளையை ஈரான் நிறுத்தியுள்ளது. ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதால், அந்நாட்டிலிருந்து பெட்ரோல் இறக்குமதியை நிறுத்தப்போவதாக ஐரோப்பிய யூனியன் நாடுகள் அறிவித்திருந்தன. இந்நிலையில், அதற்கு முன்பாகவே ஈரான் தனது பெட்ரோல் சப்ளையை நிறுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு அதிர்ச்சிவைத்தியம் கொடுத்துள்ளது, பலே கில்லாடிதான் ஈரான். இஸ்ரேலும் அதன் கைக்கூலிகளான அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் அராஜகங்கள் தோழ்வியில் முடிய இறைவனிடம் பிரார்த்திப்போம்

0 கருத்துகள்: