தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.2.12

திருக் குர்ஆனுக்கு தீ வைத்து அமெரிக்கப்படையின் வெறியாட்டம்


ஆப்கானிஸ்தானில் குர்ஆன் எரித்ததாக அமெரிக்க ராணுவ தளம் முன்பு பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் முகாமிட்டுள்ளன. அவற்றில் காபூல் அருகேயுள்ள பக்ராம் என்ற இடத்தில் அமெரிக்காவின் விமானப் படைத்தளம் உள்ளது.இங்குள்ள குப்பை தொட்டியில் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆன் புத்தகங்கள் எரிந்த நிலையில் கிடந்ததாக
செய்தி வெளியாகின. இது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்த சுமார் 2 ஆயிரம் பேர் பக்ராம் விமானப் படைத்தளம் முன்பு திரண்டனர். அங்கு அமெரிக்காவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள்.
 மேலும் விமானப் படைத்தளம் மீது பெட்ரோல் குண்டுகளையும், கற்களையும் வீசி தாக்கினார்கள். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அவர்களால் போராட்டக் காரர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே ரப்பர் குண்டுகளால் சுட்டனர்.
அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர்கள் வானில் பறந்து நெருப்பு மழை பொழிந்தன. இருந்தும் ஏராளமானவர்கள் விமான படைதளத்தின் வாசல்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர், ராணுவ அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் சமரச பேச்சு நடத்தி அமைதிப்படுத்தினர்.
இதற்கிடையே நடந்த சம்பவத்துக்கு ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவ கமாண்டர் ஜெனரல் ஜான் ஆலென் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
அமெரிக்க ராணுவ மந்திரி லியானஸ் பெனேட்டா வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? என கண்டறிய விரிவான விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்துள்ளார்.
இது குறித்து பக்ராம் மாகாண கவுன்சில் தலைவர் அகமது ஷகி ஷகத் கூறும்போது, கைது செய்யப் பட்டவர்கள் இங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் விட்டுச் சென்ற பொருட்களை அமெரிக்க ராணுவ வீரர்கள் எரித்துள்ளனர். அதில், திருக்குர்ஆன் புத்தகங்களும் இருந்துள்ளன. எத்தனை புத்தகங்கள் எரிக்கப்பட்டன என தெரியவில்லை. பல புத்தகங்கள் பாதி எரிந்த நிலையில் உள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: