தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.2.12

திருப்பூர் நகை கடை கொள்ளை: வடமாநிலத்தவரின் கைவரிசை!


திருப்பூர் ஆலுக்காஸ் நகைக்கடையில் நடந்த கொள்ளையில் வடமாநிலத்தவர்கள் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் குமரன் சாலையிலுள்ள ஆலுக்காஸ் நகைக்கடையில் சுமார் 12 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த நகைக்கடையினைக் கேரளாவிலுள்ள திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தி வருகின்றனர்.
பூட்டப்பட்டிருந்த கடையின் பின்பக்க சாளரத்தை கேஸ் வெல்டிங் மூலம் வெட்டி மாற்றி, நடத்தப்பட்ட இந்தத் துணிகர
கொள்ளையில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினர் முழுவீச்சில் இறங்கியுள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட கடையின் உள்ளே, நான்கு கேஸ் சிலிண்டர்கள், ஸ்குரூ ட்ரைவர் முதலான கேஸ் வெல்டிங்கிற்கு உபயோகப்படுத்தப்பட்ட பொருட்கள் அடங்கிய பை கண்டெடுக்கப்பட்டது. அவை அனைத்தும் புதிய பொருட்களாக இருந்ததால், சமீபத்தில் வாங்கப்பட்டிருக்க வேண்டுமென்ற அடிப்படையில் நடந்த விசாரணையில் கேஸ் சிலிண்டர் வாங்கிய கடையையும் ஸ்க்ரூ டிரைவர் முதலான பொருட்கள் வாங்கிய கடையையும் காவல்துறையினர் கண்டறிந்தனர்.
அவர்கள் கொடுத்த தகவல்படி கொள்ளையர்களின் மாதிரி படம் வரையப்பட்டுள்ளது. இதுவரை கிடைத்துள்ள தகவல்படி, இத்துணிகர கொள்ளையில் ஈடுபட்டவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கொள்ளையர்களைப் பிடிக்க தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

0 கருத்துகள்: