தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.2.12

சர்வதேச சட்டத்தைத் தூக்கி் எறிந்தது இலங்கை! மாலத்தீவு விரைகிறது அதிரடிப்படை!!


கிளர்ச்சிகளால் தூக்கி எறியப்பட்ட மாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு இலங்கை இராணுவம் அனுப்பி வைக்கப்படுகின்றது. சட்ட ரீதியாகத் தற்போது ஆட்சியில் இருக்கும் மாலைதீவு அரசுடன் உறவுகளைப் பேணாது கிளர்ச்சிகளால் பதவி இழக்கப்பட்ட ஒருவருடன் உறவைப் பேணுவது சர்வதேச சட்டத்தை மீறும் நடவடிக்கை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரிய வருவதாவது,மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டின் பாதுகாப்புக்காக, இலங்கை அரசாங்கம் இலங்கை பாதுகாப்பு படையினரை மாலைத்தீவுக்கு அனுப்பி வைக்க உள்ளது.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவின் ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தில் பணியாற்றும் 20 படையினர் , உதவி காவற்துறை அத்தியட்சகர் ஒருவர் தலைமையிலான 10 அதிரடிப்படையினர் மற்றும் 15 இராணுவத்தினர் இவ்வாறு மாலைத்தீவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

ஜனாதிபதி மகிந்தவின் நண்பர் மொஹமட் நஷீட்டின் பாதுகாப்புக்காக இவ்வாறு இலங்கை பாதுகாப்பு படையினரை அனுப்பி வைப்பது சர்வதேச சட்டங்களை மீறும் நடவடிக்கை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போது சட்டரீதியாக செயற்படும் மாலைத்தீவு அரசாங்கத்துடன் தொடர்புகளை பேணுவதற்கு பதிலாக கிளர்ச்சிகள் மூலம் பதவியில் இருந்து இறக்கப்பட்ட ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக இலங்கை அரசாங்கம் செயற்படுவது சர்வதேச சட்டங்களை மீறும் நடவடிக்கை எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.;

இதனால் இந்த நடவடிக்கையை மூடி மறைப்பதற்காக மாலைத்தீவில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்புக்காக என தெரிவித்து, இலங்கை படையினர் அங்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். 
இதற்காக மாலைத்தீவில் உள்ள இலங்கை தூதுவர் தேல பண்டாரவிடம் இருந்து கடிதம் ஒன்றும் பெறப்பட்டுள்ளது.

மாலைத்தீவுக்கான இலங்கை தூதுவர், மகிந்த ராஜபக்ஸவின், பாடசாலை கால நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: