தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.2.12

வங்கிக்கொள்ளையர்கள் என்கவுண்டர் தொடர்பான விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்


வங்கிக்கொள்ளையர்கள் என கருதப்படும் ஐவர் செ ன்னையில் என்கவுண்டர் முறையில் சுட்டுக்கொல் லப்பட்டமை குறித்த விசாரணை மேற்கொள்ள சிபி சிஐடிக்கு தமிழக காவற்துறை டிஜிபி ராமானுஜம் உ த்தரவிட்டுள்ளார். என்கவுண்டர் குறித்து சர்ச்சைகள் தொடர்ந்து வரும் நிலையில் பீகார் மாநில சட்ட பேர வையிலும் இவ்விவகாரம் ஒலித்திருந்தது. தமிழக காவற்துறையினரின் தகவல்கள் முரண்பாடாக இரு ப்பதாகவும், அவர்கள்
குற்றவாளிகளாக இருந்தாலும், என்கவுண்டரில் கொல் வ து சரியல்ல எனவும்  பீஹார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள் ளார். தேசிய மனித உரிமைகள் ஆணையமும் இது தொடர்பில் விளக்கமளிக் குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் நேரில் விசாரணை மேற்கொள்ள தமது குழுவொன்றை தமிழகத்திற்கு விரையில் அனுப்பவுள்ளதாக தேசிய  மனித உரிமை ஆணையத்தின் தலைவர் கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரத்தை  சிபிஐ விசாரணை செய்ய வேண்டுமென கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ராமானுஜம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

0 கருத்துகள்: