தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.2.12

நெல்சன் மண்டேலா மருத்துவமனையில் அனுமதி


தெ.ஆபிரிக்கவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண் டேலா அடிவயிற்று கோளாறு (Adbominal Comlaint) காரண மாக மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். நீண் டகாலமாக இப்பிரச்சினையால் அவர் பாதிக்கப்பட்டு வந் ததாகவும், அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அவசிய மானது என கருதியதால் மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளன ர்.  நெல்சன் மண்டேலாவின்
நெருங்கியவர்கள் பலர், தொடந்து அக்கறையுடன்நலம் விசாரித்து வருவதால், மெண்டேலாவின் ஆரோக்கியம் குறித்து தினம்தோறும் மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தர்போதைய ஜனாதிபதி ஜாகொப் சூமாவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 93  வயதான நெல்சன் மண்டேலா இறுதியாக 2010 தெ.ஆபிரிக்க உலக காற்பந்து போட்டிகளின் போது மக்கள் முன்னிலையில் நேரிடையாக தோன்றியிருந்தார். அதன் பின்னர் எந்த வொரு பொது நிகழ்விலும் கலந்து கொள்ளவில்லை.

Madiba என தெ.ஆபிரிக்க மக்களால் அன்பாக அழைக்கப்படும் நோபல் பரிசு பெற்ற நெல்சன் மண்டேலா, இன வேறுபாடுகளுக்கு எதிராக போராடியதால், 27 வருடம் சிறைவாசம் அனுபவித்தார். 1990 இல் விடுவிக்கப்பட்ட அவர், 1994ம் ஆண்டு தெ.ஆபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியாக பதவியேற்றார். 1999 இல் பதவி விலகிய அவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்னர்  அரசியல் நடவடிக்கைகளிலிருந்து முற்றாக ஓய்வு பெற்றார். 

0 கருத்துகள்: