தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.2.12

சவுதி அரேபியா: போதைப் பொருள் கடத்தியவர் தலையை துண்டித்து மரண தண்டனை.


சவுதி அரேபியாவில் போதை கடத்தல் ஆசாமியின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் சட்ட திட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்படுகின்றன.  பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பெண்கள் கார் ஓட்டவும், ஆண் துணையில்லாமல் பொது இடங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓட்டுரிமையும் மறுக்கப்பட்டது.  கடும் போராட்டத்துக்கு பின்னர் தேர்தலில் போட்டியிடவும் ஓட்டளிக்கவும் சமீபத்தில் பெண்களுக்கு உரிமை வழங்கப்பட்டது.
போதை கடத்தல், கொலை, பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை வரை விதிக்கப்படுகிறது. Ôகடந்த ஆண்டு மட்டும் 79 பேருக்கு சவுதி அரசு மரண தண்டனை நிறைவேற்றி உள்ளதுÕ என்று சர்வதேச பொது மன்னிப்பு கழகம் புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.
மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், போதை பொருள் கடத்திய குற்றத்துக்காக சவுதி அரேபியாவை சேர்ந்த வாகித் அடாவி என்பவருக்கு நேற்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து சவுதி உள்துறை அதிகாரிகள் கூறுகையில், ஆஷிஷ் போதை பொருளை கடத்தியதாக வாகித் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவருடைய தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்று தெரிவித்தனர். இதன்மூலம் இந்த ஆண்டில் இதுவரை 9 பேருக்கு சவுதியில் மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: