பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக மிரட் டிய கர்நாடக முன்னாள்முதல்வர் எடியூரப்பாவுக்கு பதி லடியாக " நாளை வரை காத்திருக்க வேண்டியதுஇல் லை.இன்றே அவர்கள் கட்சியில் இருந்து விலகிச் செல் லலாம்." என்று பாஜக தலைவர் நிடின் கட்காரி தெரிவி த்துள்ளார்.மூன்றரை ஆண்டுகள் மாநிலத்தில் சிறப்பா ன ஆட்சியை வழங்குவார்கள் என்று எதிர்பார்த்தோம். அதில் எங்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.இப்போது ஆட்சியை சதானந்த கவுடா சிறப்பாக
நடத்தி வருவதா ல், அவரே தொடர்ந்துமுதல்வராக நீடிப்பார்.
கட்காரி மேலும் கூறுகையில், கட்சியை கட்டிக்காத்தவர் எடியூரப்பா என்பதில் சந்தேகமில்லை. தனக்கு பதவி வழங்கக் கோரி அவர் கட்சியின் மேலிடத்துக்கு எந்தவித கெடுவும் விதிக்கவில்லை என்றார். ஆனால் பிப்ரவரி 27-ந் தேதிக்குள் தம்மை முதல்வராக்க வேண்டும் அல்லது கட்சித் தலைவர் பதவி வழங்கவேண்டும் என்று எடியூரப்பா முன்னர் கெடு விதித்திருந்தார். மேலும் தனக்கு ஆதரவான சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு விருந்து அளித்து தமது பலத்தையும் எடியூரப்பா வெளிப்படுத்தியிருந்தார்.
எடியூரப்பா பெங்களூர் வந்த கட்கரியையும் சந்தித்து தமது கோரிக்கையை வலியுறுத்தியிருந்தார். பாரதிய ஜனதா கட்சியின் தற்போதைய நிலைப்பாட்டினால் எடியூரப்பா மிகவும்அதிருப்தி அடைந்துள்ளார். தமது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வரும் எடியூரப்பா, பிப்ரவரி 27-ந் தேதி வரை தாம் விதித்த கெடுவுக்காககாத்திருப்பார் என்றும் பிப்ரவரி 27-ந் தேதிக்குப் பிறகு எடியூரப்பா வேறு இலக்கு நோக்கி பயணிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி:இன்நேரம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக