தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.2.12

டுவிட்டரிலேயே' பல மணி நேரங்களைக் கழிப்பது உடல் நலத்திற்கு உகந்ததல்ல. டுவிட்டர் நிறுவனர்


சமூக வலைத் தளமான "டுவிட்டரிலேயே' பல மணி நேரங்களைக் கழிப்பது உடல் நலத்திற்கு உகந்ததல்ல என "ட்விட்டர்' நிறுவனர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.இது குறித்து, "டுவிட்டர்' நிறுவனர்களில் ஒருவரும், அந்நிறுவனத்தின் இயக்குனருமான பிஜ் ஸ்டோன், 37, கூறியதாவது: தற்போது "டுவிட்டரை' உலகம் முழுவதும் 50 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். இதில் பல மணி நேரங்கள், அதாவது 12 மணி நேரம் வரை செலவழிக்கின்றனர். இது உடல் நலத்திற்கு

உகந்ததல்ல.இதுபோன்ற சமூக வலைத் தளம் அல்லது இணையதளத்தை ஒரு விஷயத்தை தெரிந்து கொள்வதற்காக, நீங்கள் விரும்பும் ஒன்றைப் பார்ப்பதற்காக, நீங்கள் விரும்புவதைக் கற்றுக் கொள்வதற்காக அணுகலாம். அதுதான் நலமான வழி. இவ்வாறு பிஜ் ஸ்டோன் தெரிவித்தார்.

0 கருத்துகள்: