தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.2.12

ஏமன்: புதிய அதிபர் பதவியேற்ற சில மணிநேரத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல். 26 பேர் பலி


அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து, ஏமன் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே நாடு திரும்பிய நிலையில், புதிய அதிபராக, அப்துர் அபு மன்சூர் ஹாடி நேற்று பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், நேற்று அதிபர் மாளிகைக்கு வெளியில் நடந்த தற்கொலைத் தாக்குதலில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த, 26 வீரர்கள் பலியாயினர்.எகிப்து புரட்சியை அடுத்து, ஏமனிலும் மக்கள் புரட்சி செய்தனர். 10 மாதங்களுக்கும் மேலாக நீடித்த இப்புரட்சி, வளைகுடா

நாடுகள் கூட்டுறவு கவுன்சில் மூலம், ஒரு முடிவுக்கு வந்தது. அதன்படி, கடந்த மாதம் அப்போதைய அதிபர் அலி அப்துல்லா சலே, தனது பதவியை துணை அதிபர் அப்துர் அபு மன்சூர் ஹாடியிடம் ஒப்படைத்தார்.
தொடர்ந்து, சிகிச்சைக்காக அமெரிக்காவிற்குச் சென்றார். கடந்த வாரம், ஏமனில் அதிபர் தேர்தல் நடந்தது. இதில், வேட்பாளராக ஹாடி மட்டுமே போட்டியிட்டார். இத்தேர்தலில், 66 லட்சம் ஓட்டுகள் அதாவது, 65 சதவீதம் ஓட்டுகள் பதிவாயின. இதையடுத்து, தலைநகர் சனா அருகில், ஹத்ராமவுத் என்ற இடத்தில் உள்ள முகல்லா என்ற அதிபர் மாளிகையில், நேற்று ஹாடி புதிய அதிபராகப் பதவியேற்றார்.
தனது உரையில் அவர், நாட்டின் ஒற்றுமை, சுதந்திரம் மற்றும் இறையாண்மையை காப்பதற்கு உறுதி பூண்டிருப்பதாகத் தெரிவித்தார். பதவியேற்பு முடிந்த சில மணி நேரம் கழித்து, அதிபர் மாளிகை வாசலில், மனித வெடிகுண்டு நபர் ஒருவர், வாகனத்துடன் வந்து மோதியதில், குண்டு வெடித்து பாதுகாப்புப் படை வீரர்கள், 26 பேர் பலியாயினர். இதற்கிடையில், அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற முன்னாள் அதிபர் சலே, நேற்று நாடு திரும்பினார்.

0 கருத்துகள்: